வணிகம்

ஆசியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார் கவுதம் அதானி

2-வது இடத்துக்கு சரிந்த முகேஷ் அம்பானி

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆசி​யா​வின் பெரும் பணக்​காரர் வரிசை​யில் முதலிடத்​துக்கு தொழில​திபர் கவுதம் அதானி முன்​னேறி​யுள்​ளார்.

புளூம்​பெர்க் பில்​லியனர் இன்​டெக்ஸ் நேற்று வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யின்​படி, முதல் இடத்​தில் நீண்ட கால​மாக இருந்து வந்த முகேஷ் அம்​பானியை பின்​னுக்​குத்​தள்ளி கவுதம் அதானி தற்​போது ஆசி​யா​வின் மிகப்​பெரிய பணக்​கார​ராக உயர்ந்​துள்​ளார்.

கவுதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 92.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களைத் தொட்​டுள்​ளது. இதன் மூலம் ஆசிய அளவில் முதலிடத்​தை​யும், உலக அளவில் அவர் 19-வது இடத்​தை​யும் பெற்​றுள்​ளார். அதே நேரத்​தில் முகேஷ் அம்​பானி​யின் சொத்து மதிப்பு 90.8 பில்​லியன் டால​ராக உள்​ளது. இதனால் அவர் ஆசி​யா​வில் 2-வது இடத்​தி​லும், உலக அளவில் 20-வது இடத்​துக்​கும் சரிந்​துள்​ளார்.

இரு​வருக்​கும் இடையே உள்ள வித்​தி​யாசம் மிகக் குறைவு என்​றாலும், இந்த மாற்​றம் சந்​தை​யின் தாக்​கத்தை தெளி​வாக காட்​டி​யுள்​ளது. கவுதம் அதானி​யின் சொத்து மதிப்பு இந்த ஆண்டு மட்​டும் 8.1 பில்​லியன் டாலர்​கள் அதி​கரித்​துள்​ளது. இந்த வளர்ச்​சிக்கு அவரது குழும நிறு​வனங்​களின் பங்​குச்​சந்தை செயல்​பாடு முக்​கியப் பங்கு வகிக்​கிறது. சந்​தை​யில் சரிவு ஏற்​பட்ட நாட்​களில் கூட அதானி குழும நிறு​வனப் பங்​கு​கள் சிறப்​பான முன்​னேற்​றத்​தில் உள்​ளது.

நேற்​றைய ஒரு நாள் வர்த்​தகத்​தில் மட்​டும் கவுதம் அதானி சொத்து மதிப்பு சுமார் 3.56 பில்​லியன் டாலர்​கள் உயர்ந்​தது குறிப்​பிடத்​தக்​கது. கவுதம் அதானி குழு​மம் இந்​தி​யா​வின் மிகப்​பெரிய ஒருங்​கிணைந்த உள்​கட்​டமைப்பு நிறு​வனங்​களில் ஒன்​றாக உரு​வெடுத்​து, துறை விரி​வாக்​கத்​தில் தீவிர​மாக செயல்​பட்டு வரு​கிறது. துறை​முகங்​கள், விமான நிலை​யங்​கள், மின்​சா​ரம் உற்​பத்தி மற்​றும் விநி​யோகம், இயற்கை வளங்​கள், தரவு மையங்​கள், சிமெண்​ட், பாது​காப்பு மற்​றும் விண்​வெளி துறை, நகர்ப்​புற மறு​வளர்ச்​சி, சாலை மற்​றும் ரயில் திட்​டங்​கள், விரை​வாக விற்​பனை​யாகும் நுகர்​வோர் பொருட்​கள், மின்​னணு தளங்​கள், வணிக அடை​காப்பு போன்ற பல்​வேறு துறை​களில் அதன் பாதை விரிவடைந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இதனிடையே, பங்​குச்​சந்​தை​யின் முக்​கிய குறி​யீ​டான சென்​செக்​ஸ், நிஃப்டி சரிவை சந்​தித்​துள்​ளது.

SCROLL FOR NEXT