வணிகம்

லட்சத்தீவில் இருந்து முதல் முறையாக நீர் விமான சேவை விரைவில் அறிமுகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வில் முதல் வணிக ரீதியி​லான நீர் விமான சேவை லட்​சத்​தீ​வில் இருந்து தொடங்க உள்​ளது.

இந்​திய பயணி​கள் விமானப் போக்​கு​வரத்​து, தரை வழியில் மட்​டுமல்​லாமல் தற்​போது நீர் வழி​யிலும் விமானசேவை வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. அதன் முதல் கட்​ட​மாக லட்​சத் தீவில் இருந்து நீர் விமான சேவை விரை​வில் தொடங்​கப்பட உள்​ளது. ‘ஸ்​கைஹாப் ஏவி யேஷன்’ என்ற நிறு​வனம் இதற்​கான அனு​ம​தியை சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகத்​திடம் இருந்து பெற்றுள்​ளது.

லட்​சத்​தீ​வில் இருந்து நீர் விமான சேவையை வழங்க ‘ஆபரேட்​டர்’ சான்​றிதழ் இந்த நிறு​வனத்​துக்கு வழங்கப்பட்டுள்​ளது. முன்​ன​தாக உத்​த​ராண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகு​தி​யில் ஸ்கைஹாப் ஏவி​யேஷன் நிறு​வனம் கங்கா தடுப்​பணை​யில் இருந்து விமானத்தை மேலே கிளப்​பி​யும், நீரில் இறக்​கி​யும் சோதனையை வெற்​றிகர​மாக முடித்​துள்​ளது.

இதையடுத்​து, சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்குநரகத்​தின் அனு​மதி கிடைத்​துள்​ள​தால், முதல் முறை​யாக வணிக ரீதியி​லான பயணி​கள் நீர் விமானத்தை லட்​சத்​தீ​வில் இருந்து இந்​நிறு​வனம் இயக்க உள்​ளது. இந்​தச் சேவை லட்​சத்​தீவுப் பகு​தி​யில் உள்ள 5 தீவுகளுக்கு இயக்​கப்பட உள்​ளது. இந்​நிறு​வனத்​தின் நீர் விமானத்​தில் ஒரே நேரத்​தில் 19 பேர் பயணம் செய்ய முடியும். லட்​சத்​தீ​வில் விமான நிலைய கட்​டமைப்​பு​கள் ஓரளவுக்​கு​தான் உள்​ளது.

இதனால் லட்​சத்​தீ​வில் உள்ள 5 தீவு​களுக்கு சென்று வருவது மெது​வாக​வும் சிக்​கலாக​வும் இருந்து வரு​கிறது. இந்​நிலை​யில், ஸ்கைஹாப் நிறு​வனத்​தின் நீர் விமான சேவை பெரும் மாற்​றத்​தைக் கொண்டு வரும். இதனால் பயண நேரம் வெகு​வாகக் குறை​யும். சுற்​றுலா பயணிகளின் வருகை அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்கப்படு​கிறது.

விமான நிலை​யங்​கள் அமைக்க முடியாத மலைப்​பாங்​கான இடங்​கள், யாரும் எளி​தில் செல்ல முடி​யாத தீவு​கள், நீர்ப் பகு​தி​களுக்கு இந்த நீர் விமான சேவை மிகப் பெரிய பங்​காற்​றும்.

SCROLL FOR NEXT