வணிகம்

இ30 பெட்ரோலுக்கும் உற்பத்தி வரி விலக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்​திய அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: இது​வரை​யில் 20% (இ20) எத்​த​னால் கலக்கப்பட்ட பெட்​ரோலுக்கு உற்​பத்தி வரி விலக்கு வழங்கப்பட்டுவந்​தது.

இனி, 22%, 25%, 27% மற்​றும் 30% (இ30) எத்தனால் கலந்த பெட்​ரோலுக்​கும் உற்​பத்தி வரியி​லிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். இந்த நடவடிக்​கை​யால் சந்தையில் உடனடி​யாக அதிக எத்த​னால் கலந்த பெட்​ரோல் அறிமுக​மாகப் போகிறது என கருதத் தேவை​யில்​லை.

எரிபொருள் கிடங்​கு​களில் பெட்​ரோலுடன் எத்​த​னாலை கலப்​பது ஒரு உற்​பத்​திச் செயல்​பா​டாகக் கருதப்​படு​வ​தால், அதற்கு உற்பத்தி வரி விதிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. அதைத் தவிர்க்​கவே இந்த விலக்கு ஒரு ஒழுங்​கு​முறைத் தேவை​யாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொது​மக்​கள் எத்​த​னால் கலந்த பெட்ரோல் பயன்​படுத்​து​வதை ஊக்​குவிக்​க​வும் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இதுத​விர, கச்சா எண்​ணெய் இறக்​கும​தி​யைக் குறைத்​து, உயிரி எரிபொருளின் பயன்​பாட்டை அதி​கரிக்​கவே இந்த முடிவு எடுக்கப்பட்​டுள்​ளது. மேற்கு ஆசிய போர் பதற்​றத்​தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்​து, பெட்ரோல், டீசல் விலை லிட்​டருக்கு ரூ.7.50 வரை உயர்ந்​தன. இதிலிருந்து நுகர்​வோரைப் பாது​காக்க கடந்த மார்ச் மாதம் பெட்​ரோல், டீசல் மீதான உற்​பத்தி வரியை லிட்​டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT