வணிகம்

ஊழியரின் பிஎப் பங்களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது - மாத சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு தாக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சம்பள உச்​சவரம்பு உயர்த்​தப்​பட்​ட​தால், மாதாந்​திர பிஎப் பங்களிப்பு தொகை ரூ.3,917 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படு​கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) பிடித்​தம் செய்வதற்கான மாதாந்​திர அடிப்​படை சம்பள உச்ச வரம்பை மத்திய அரசு ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்​தி​யது. இது கடந்த செப்​டம்​பர் 17-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், பிஎப் பங்​களிப்​பாக எவ்​வளவு பிடித்​தம் செய்யப்படும் என்​பது தொடர்​பாக அரசு வெளி​யிட்​டுள்ள கேள்​வி-ப​தில் தொகுப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: இதற்கு முன்பு ரூ.15 ஆயிரம் உச்​சவரம்​பாக இருந்​த​போது, ஊழியர்​கள் தங்​கள் பிஎப் சேமிப்புக்காக மாதம் ரூ.1,800 செலுத்​தினர்.

இனி ரூ.25 ஆயிரம் சம்​பளம் பெறு​பவர்​கள் ரூ.3,000 (ரூ.25,000 சம்பளத்​தில் 12%) பங்​களிப்​பார்​கள். இதுத​விர, வேலை வழங்​கும் நிறுவன பங்​களிப்பு (3.67%) ரூ.550-லிருந்து ரூ.917 ஆக உயரும். இதன் மூலம் கட்​டாய மாத பிஎப் பங்​களிப்பு ரூ.3,917 ஆக உயர்கிறது.

மேலும், வேலை வழங்​கும் நிறு​வனங்​களின் பங்​களிப்​பிலிருந்து 8.3% பங்​களிப்​பான ரூ.2,083 இனி ஓய்​வூ​திய நிதி​யத்​துக்கு (இபிஎஸ்) செல்​லும் (இதற்கு முன்பு இது ரூ.1,250 ஆக இருந்​தது). ஒரு ஊழியரின் மாத சம்​பளம் ரூ.20,000 ஆக இருந்​தால், கட்​டாய பிஎப் பங்​களிப்பு ரூ.3,134 ஆக இருக்​கும். இதில் ஊழியர் பங்கு ரூ.2,400 மற்​றும் வேலை வழங்​கும் நிறுவன பங்கு ரூ.734 ஆகும். மேலும் வேலை வழங்​கும் நிறுவன பங்​கி​லிருந்து இனி ரூ.1,666 ஓய்​வூ​திய நிதி​யத்​துக்​குச் செல்​லும்.

ஆனால் ஒரு ஊழியர் மாதம் ரூ.35,000 சம்​பா​தித்​தால், கட்​டாய பிஎப் பங்​களிப்பு ரூ.6,000 ஆக இருக்​கும் (ஊழியர் மற்​றும் வேலை வழங்​குநர் இரு​வரிட​மிருந்​தும் தலா ரூ.3,000). இபிஎஸ் என்​பது இபிஎப்ஓ ஊதிய உச்​சவரம்பை மீறாதவர்​களுக்கு மட்​டுமே கிடைக்​கும் என்​ப​தால், இதில் எந்​தத் தொகை​யும் ஓய்​வூ​திய நிதிக்குச் செல்​லாது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT