சென்னை: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்பெட்யூஆர் சிஸ்டம்ஸ், எம்பெடட் சிஸ்டம்ஸ் மற்றும் எட்ஜ் ஏஐ தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது.
இந்த நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ராஜேஷ் சுப்ரமணியம் கூறியதாவது: சர்வதேச அளவில் எட்ஜ் ஏஐ தளங்களை உருவாக்குவதில் சென்னை மற்றும் தமிழகம் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது.
இங்குள்ள சிறந்த தொழில் நுட்பத் திறமை மற்றும் நிலையான கொள்கையால் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாக ‘மாடல்நோவா’ மற்றும் ‘ஃபியூஷன் ஸ்டுடியோ’ மென்பொருளை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக சென்னையில் 100 பொறியாளர்கள் பணியாற்றும் வகையில் பிரத்யேக ‘எட்ஜ் இன்டெலி ஜென்ஸ்’ ஆய்வு மையத்தை நிறுவனம் அமைத்துள்ளது.
தற்போது இந்நிறுவனத்தில் 400 பொறியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், 2026-க்குள் இந்த எண்ணிக்கையை 550-க்கும் மேலாக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக ஏஐ/எம்எல், தரவு அறிவியல், சிஸ்டம் ஆர்க்கி டெக்ட்ஸ் நிபுணர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.