படம்: ம.பிரபு

வணிகம்

தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் குவிந்த மக்கள்: ஜவுளி, இனிப்புகள் விற்பனை களைகட்டியது

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளிக்கு இன்​னும் ஒரு வாரமே உள்ள நிலை​யில், புத்​தாடைகள், பல​காரப் பொருட்​கள் வாங்க கடைவீதி​களில் பொது​மக்​கள் குவிந்​தனர். ஜவுளிக்​கடைகளில் விற்​பனை களைகட்​டியது.

தீபாவளி பண்​டிகை நவ.8-ம் தேதி ஞாயிற்​றுக்​கிழமை கொண்டாடப்​படு​கிறது. பண்​டிகைக்கு இன்​னும் ஒரு வாரமே உள்ள நிலை​யில், நேற்று காலை முதலே சென்​னை​யின் முக்​கிய வணிகப் பகுதி​கள் அனைத்​தும் திரு​விழாக் கோலம் பூண்டிருந்தன. திரும்​பும் இடமெல்​லாம் மக்​கள் வெள்​ளம் காணப்பட்​டது. சாலைகள் எங்​கும் வாக​னங்​களாக காட்சியளித்தன.

புத்​தாடைகள், பல​காரப் பொருட்​கள், பட்​டாசுகள் வாங்க பொதுமக்​கள் தங்​கள் குடும்​பத்​தினருடன் ஜவுளிக் கடைகளி​லும் கடைவீதி​களி​லும் குவிந்​தனர். இத​னால் தலைநகரின் பிரதான வர்த்​தக மையங்​களான தியாக​ராய நகர், புரசை​வாக்​கம், பிராட்வே, வண்​ணாரப்​பேட்டை, குரோம்​பேட்டை, பாடி ஆகிய பகுதி​களில் கட்​டுக்​கடங்​காத கூட்​டம் காணப்​பட்​டது. தீபாவளியை முன்​னிட்டு அறி​முகம் செய்​யப்​பட்​டுள்ள விதவிதமான புதிய ரக ஆடைகளை தேர்ந்​தெடுக்க மக்​கள், குடும்பம் குடும்​பமாக கடைகளில் ஏறி இறங்கி ஆர்​வத்​துடன் ஷாப்​பிங் செய்​தனர்.

பேன்ட், சட்டை, சுடிதார், பட்​டுச்​சேலைகள் முதல் பாரம்​பரிய வேஷ்டிகள் வரை அனைத்து ஆடைகளும் விறு​விறுப்​பாக விற்​றுத் தீர்ந்​தன. பிரபல ஜவுளி நிறு​வனங்​கள் மட்​டுமின்றி, சாலை​யோரக் கடைகளி​லும் வியாபாரம் களைகட்​டியது. புறநகர் பகுதி​களான திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் உள்​ளிட்ட இடங்​களில் இருந்​தும் பல்லாயிரக்​கணக்​கான மக்​கள் குவிந்​ததால் வணிக வளாகங்​கள் நிரம்பி காணப்​பட்​டன. ஷாப்​பிங் முடித்து மக்​கள் குடும்​பத்​துடன் உணவருந்த சென்​றதால் ஓட்​டல்​கள், பேக்​கரிக்​களில் நீண்டவரிசை காணப்​பட்​டது.

கூட்ட நெரிசலைப் பயன்​படுத்தி திருட்டு போன்ற குற்​றங்​கள் நிகழாமல் தடுக்க முக்​கிய வணிக வீதி​களில் தீவிர போலீஸ் பாதுகாப்பு போடப்​பட்​டிருந்​தது. கண்​காணிப்பு கோபுரங்​கள் அமைத்​தும், மைக் மூலம் எச்​சரிக்கை விடுத்​தும் காவல் துறையினர் கூட்​டத்தை கண்​காணித்து வரு​கின்​றனர். சாலை​யில் வாகன நெரிசலைக் கட்​டுப்​படுத்த போக்​கு​வரத்து போலீ​ஸார் தீவிர சீரமைப்பு பணிகளில் ஈடு​பட்​டிருந்​தனர். வாரக் கடைசி நாளான இன்று (ஞாயிற்​றுக்​கிழமை) கூட்​டம் மேலும் அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இத​னால், கடைவீதி​களில் கூடுதல் பாது​காப்பு மற்​றும் வசதி​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT