கடற்படை தளபதி தினேஷ்குமார் திரிபாதி

 
வணிகம்

‘வளர்ந்த பாரதம்’ இலக்கை எட்ட கடல்வழி பொருளாதாரம் இரட்டிப்பாக வேண்டும்: கடற்படை தளபதி பேச்சு

செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடற்படை தளபதி தினேஷ்குமார் திரிபாதி பேசியதாவது:

உலக நாடுகளின் ஏற்றுமதி இறக்குமதியில் 90 சதவீதம் கடல்வழியையே சார்ந்து உள்ளது. இந்தியாவின் 95 சதவீத வர்த்தக ஏற்றுமதி, இறக்குமதி கடல்வழியாகவே நடைபெறுகிறது. 2047-ல் நாம் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையே கடல்வழியை இன்னும் அதிக அளவில் பயன்படுத்தவேண்டும்.

          

நமது நாடு 3 பக்கங்களிலும் கடல்களால் சூழப்பட்டிருப்பதால், நாம் புவியியல் ரீதியாகப் பெரும் பாக்கியம் பெற்றவர்களாக உள்ளோம். அந்தக் கடல்களை அனைத்து விதமான தடைகளிலிருந்தும் பாதுகாப்பது நமது பொறுப்பாகும். நீலப் பொருளாதாரம் (கடல்வழி வணிகம்) நாட்டின் 4 சதவீத பொருளாதாரத்தை நிறைவு செய்கிறது. இது மிகவும் குறைந்த அளவுதான். வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய இந்த 4 சதவீதம் இரட்டிப்பாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT