ஓசூர் பகுதியில் கீரைத் தோட்டங் களில் ஊடுபயிராக சாகுபடி செய்து,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுண்டைக்காய் ஏற்றுமதி செய்யப் படுகிறது. ஆண்டு முழுவதும் சந்தை வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓசூர் பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் மண்வளம் காரணமாக காய்கறி மற்றும் மலர் சாகுபடிக்கு கை கொடுத்து வருகிறது. இதில், குறுகிய காலப் பயிர்களை சந்தை, நுகர்வு தேவை அடிப் படையில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய் கறிகள் ஓசூர் சந்தைக்கு கொண்டு வரப் பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா. கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும். வெளி நாடுகளுக்கும் விற்பனைக்குச் செல்கின்றன.
இந்நிலையில், சந்தையில் ஆண்டு முழுவதும் அதிக வரவேற்பும், மருத்துவக் குணம் அதிகமும் உள்ள சுண்டைக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக கெலமங்கலம், உத்தனப்பள்ளி மற்றும் அஞ்சலகிரி பகுதியில் புதினா தோட்டங்களில் ஊடுபயிராகவும், தனியாகவும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், சுண்டைக்காய் நாற்றுகளை வளர்த்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இதன் மூலம் அதிக வருவாய் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியில் அதிகளவில் புதினா, கொத்தமல்லி மற்றும் பல்வேறு கீரை வகைகள் சாகுபடி செய்து வருகிறோம். இத்துடன் வயல் வரப்புகள் மற்றும் கீரைகளுக்கு இடையில் ஊடுபயிராக சுண்டைக்காய் செடியை நடவு செய்துள்ளோம். சுண்டைக்காய்க்கு பொது மக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. இதனால், இச்சாகுபடிளங் களுக்கு பலன் அளித்து வருகிறது.
பூச்சிக்கொல்லி மருந்து இல்லாமல் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால், நோய்ப் பாதிப்பும் குறைவு. நடவு செய்த 6. மாதங்களில் சுண்டைக்காய் அறுவடைக்கு கிடைக்கும். இதை உள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்.
ஒரு கிலோ சுண்டைக்காய்க்கு ரூ.500 வரை விலை கிடைக்கிறது. சுண்டைக்காயை வியாபாரிகள் வாங்கி அதனை வத்தல், பொடி உள்ளிட்ட மதிப்புக் கூட்டுப் பொருளாக மாற்றி பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர்.
நாற்று உற்பத்தி செய்து ஒரு நாற்று ரூ.15-க்கு வெளி மாநில விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகி றோம். சுண்டைக்காய் சாகு படியில் புதிய தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனத்துறைக்குச் சொந்தமான காலி இடங்களில் மலைவாழ் மக்கள் சுண்டைக்காய் சாகுபடி செய்ய ஏற்பாடுகள் செய்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.