வணிகம்

கோவை - மும்பை இடையே தினமும் விமான சேவை: தொழில் துறையினர் வரவேற்பு

செய்திப்பிரிவு

கோவை: கோவையில் இருந்து ​மும்​பைக்கு தின​மும் 2 விமான சேவை, வரும் செப்​டம்​பர் 1-ம் தேதி முதல் தொடங்க உள்​ளது. இதற்கு கோவை தொழில் துறை​யினர் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.

கோவை சர்​வ​தேச விமான நிலை​யத்​திலிருந்து சென்​னை, பெங்​களூரு, புதுடெல்லி உள்​ளிட்ட பல்​வேறு நகரங்​களுக்​கும், சார்​ஜா, அபு​தாபி, துபாய்க்​கும் விமான சேவை வழங்​கப்​பட்டு வருகிறது. கோவை​யில் இருந்து நாளொன்​றுக்கு மொத்​தம் 28 விமானங்​கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், வரும் செப்​டம்​பர் 1-ம் தேதி முதல் கோவை​யில் இருந்து மும்​பைக்கு தின​மும் 2 விமானங்​களை இயக்க உள்​ளது. கோவை​யில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்​படும் விமானம், மும்​பைக்கு 10 மணிக்கு சென்​றடை​யும்.

இரவு 10.20 மணிக்கு புறப்​படும் மற்​றொரு விமானம் நள்​ளிரவு 12.40 மணிக்கு மும்​பையை அடை​யும்.

இதே​போல் அதி​காலை 5.25 மணிக்கு மும்​பை​யில் இருந்து புறப்​படும் விமானம், காலை 7.20 மணிக்கு வரும். இரவு 7.55 மணிக்கு புறப்​படும் மற்​றொரு விமானம் இரவு 9.50 மணிக்கு கோவையை வந்​தடை​யும்.

இது தொடர்​பாக விமான நிலைய அதி​காரி​கள் கூறும்​போது, “கோவை​யில் இருந்து மும்பை வழி​யாக வெளி​நாடு​களுக்கு செல்​லும் பயணி களுக்கு இந்த புதிய விமான சேவை பயனுள்​ள​தாக இருக்​கும்.

பயணி​கள் தங்​களது உடைமை​களை இறு​தி​யாக செல்​லும் இடம் வரை பதிவு செய்து கொள்ள முடி​யும். ஒரே பயணச்​சீட்​டில் வெளி​நாடு​களுக்கு பயணம் செய்ய முடி​யும்.

இதில் மும்​பை​யில் விமானம் மாறும்​போது எளி​தான இணைப்பு வசதி கிடைப்​ப​தால், கால​தாமதம் தவிர்க்​கப்​படும். குறிப்​பாக மூத்த குடிமக்​கள் மற்​றும் குடும்​பத்​தினருடன் பயணம் செய்​வோருக்கு பயணம் எளி​தாகும்” என்​ற​னர்.

தொழில் துறை​யினர் தரப்​பில் கூறுகை​யில், “கோவை​யில் இருந்து நீண்ட தூர சர்​வ​தேச நகரங்​களுக்கு நேரடி விமான சேவை குறை​வாக உள்ள நிலை​யில், காலை, இரவு நேரங்​களில் மும்பை விமான சேவை முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது.

கோவை​யில் இருந்து மும்பை வழி​யாக பல்​வேறு நாடு​களுக்கு ஒரே விமான மாற்​றத்​தில் பயணம் மேற்​கொள்ள முடி​யும். சர்​வ​தேச விமான இணைப்​பு​கள் அதி​கரிப்​ப​தன் மூலம் கோவை​யின் வர்த்​தகம், சுற்​றுலா மற்​றும் முதலீட்டு வாய்ப்பு அதி​கரிக்​கும். இதன் மூலம் மேற்கு தமிழ்​நாட்​டில் வேலை​வாய்ப்​பு​கள் மற்​றும் பொருளா​தார வளர்ச்​சி​ மேம்​படும்.

கோவை–​மும்பை இடையே​யான விமான இணைப்பை வலுப்படுத்தியுள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்றனர்.

SCROLL FOR NEXT