சென்னை பெருநகர பகுதி 3-வது மாஸ்டர் பிளான்: நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை பெருநகர பகுதி 3-வது மாஸ்டர் பிளான்: நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்​னையை உலகத்​தரம் வாய்ந்த, பெருநகர​மாக மாற்​றும் வகை​யில் சென்னை பெருநகர பகு​திக்​கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்​கப்​பட்டு வரு​வ​தாக நகர்ப்​புற வளர்ச்​சித்​துறை கொள்கை விளக்​கக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று தாக்​கல் செய்​யப்​பட்ட வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற வளர்ச்​சித்​துறை​யின் 2026-2027-ம் ஆண்​டுக்​கான கொள்கை விளக்​கக் குறிப்​பில் கூறப்​பட்டு இருப்​ப​தாவது:

விரை​வான நகர்​ம​யம், மாறிவரும் பொருளா​தா​ரச் சூழல், அதி​கரித்து வரும் உள்​கட்​டமைப்பு தேவை​கள், புதி​தாக தோன்​றும் சுற்​றுச்​சூழல், பரு​வநிலை சார்ந்த சவால்​கள் ஆகிய​வற்றை அடிப்​படை​யாகக் கொண்டு சென்னை பெருநகர பகு​திக்கு ஒரு விரி​வான நீண்​ட​கால திட்​ட​மிடல் கட்​டமைப்பு அவசி​ய​மாகிறது.

முதலா​வது மாஸ்​டர் பிளானில் (1976) சென்னை மாநகரில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலை குறைப்​பது, பொருளா​தார வளர்ச்​சியை ஊக்​கு​விப்​பது, மூன்று வட்​டச்​சாலைகள் அமைப்​பது போன்​றவற்​றுக்​கும், 2-வது மாஸ்​டர் பிளானில் (2006-2026) செறி​வான நகர்ப்​புற வளர்ச்​சி, சுற்​றுச்​சூழல் நிலைத்​தன்​மை, வெள்​ளத்​தடுப்பு நடவடிக்​கைகள், நீர்​நிலைகள் பாது​காப்​பு, தகவல் தொழில்​நுட்​பம் போன்​றவற்​றுக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​பட்​டது.

தற்​போது, முதலா​வது, 2-வது மாஸ்​டர் பிளான் திட்​டத்​தின் அடிப்​படை​யில் 3-வது மாஸ்​டர் பிளான் 2027-2047) தயாரிக்க கடந்த 2021-ம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்​சிக் குழு​மத்​துக்கு (சிஎம்​டிஏ) தமிழக அரசு அனு​மதி வழங்​கியது.

இது தொடர்​பான துறை​சார் ஆய்​வு​களை சிஎம்​டிஏ மேற்​கொண்​டுள்​ளது. செயற்​கைக்​கோள் படங்​கள் மற்​றும் வேறு​பட்ட உலகளா​விய இருப்​பிட அமைப்பு (டிஜிபிஎஸ்) ஆய்​வு​களை பயன்​படுத்தி புவி​யியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) உதவி​யுடன் கூடிய டிஜிட்​டல் அடிப்​படையி​லான வரைபட​மும் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது.

3-வது மாஸ்​டர் பிளான் அனை​வரை​யும் உள்​ளடக்​கிய, நிலை​யான நகர்ப்​புற வளர்ச்​சிக்கு வழி​காட்​டு​வதற்​கு, உள்​கட்​டமைப்பு திட்​ட​மிடலை வலுப்​படுத்​து​வதற்​கும், சமச்​சீ​ரான பொருளா​தார வளர்ச்​சியை ஊக்​கு​விப்​ப​தற்​கு, சுற்​றுச்​சூழல் வளங்​களை பாது​காப்​ப​தற்​கும் மக்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்​து​வதற்​கும் ஒரு சட்​டப்​பூர்வ கட்​டமைப்​பாக செயல்​படும்.

அந்த வகை​யில், சென்​னையை உலகத்​தரம் வாய்ந்த, எதிர்​காலத்​தேவை​களுக்கு ஏற்ற பெருநகர​மாக மாற்ற அரசு உறு​திபூண்​டுள்​ளது. இதற்​காக சிஎம்​டிஏ சென்னை பெருநகர பகு​திக்​கான 3-வது மாஸ்​டர் பிளானை தயாரித்து வரு​கிறது.

2047-ம் ஆண்​டுக்​குள் இப்​பகுதி முழு​வதும் ஒருங்​கிணைந்த, சமச்​சீ​ரான வளர்ச்​சியை ஊக்​குவிக்​கும் வகை​யில் விரி​வாக்​கப்​பட்ட பகு​தி​யுட​னும் இணைக்​கப்​படும்.

1,189 சதுர கிலோ மீட்​டருக்​கான 3-வது மாஸ்​டர் பிளானை இறுதி செய்​வதற்​கும், விரி​வாக்​கப்​பட்ட சென்னை பெருநகர் பகு​தி​களுக்​கான மாஸ்​டர் பிளான் தயாரிக்​க​வும், சர்​வ​தேச அளவில் அனுபவம் வாய்ந்த திட்ட ஆலோ​சகரை சிஎம்​டிஏ நியமிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர பகுதி 3-வது மாஸ்டர் பிளான்: நகர்ப்புற வளர்ச்சித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்
வார்டு உறுப்பினர் நிதியை விடுவிக்க வேண்டும்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in