பிரதிநித்துவப் படம்

 
வணிகம்

சென்னையில் கோஒர்க்ஸ் விரிவாக்கம்: 3,900 இடங்களுடன் 6 புதிய மையங்கள் திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: நாட்​டின் முன்​னணி அலு​வல​கப் பணி​யிட வசதி வழங்​குந​ரான கோஒர்க்​ஸ், சென்னை நகரில் 6 புதிய மையங்​களை திறந்​துள்​ளது.

புரூக்ஃபீல்ட் பிராப்​பர்​டீஸ் ஆதர​வுடன் செயல்​படும் இந்​நிறு​வனத்​தின் இந்த விரி​வாக்​கம், சென்னை நகரை முக்​கிய வளர்ச்சி சந்​தை​யாகக் கருதும் அதன் நீண்​ட​கால வணிக உத்தியின் ஒரு பகு​தி​யாகும்.

இந்த புதிய மையங்​கள் மூலம் 2.9 லட்​சம் சதுர அடி பரப்​பளவு மற்​றும் 3,900-க்​கும் மேற்​பட்ட பணி​யிட மேசைகள் புதி​தாக சேர்க்கப்படு​கின்​றன.

இதன்​மூலம் சென்னை நகரில் கோஒர்க்ஸ் மையங்​கள் எண்​ணிக்கை 10 ஆகவும், மொத்த பரப்​பளவு சுமார் 5 லட்​சம் சதுர அடி​யாக​வும், பணி​யிட மேஜைகள் எண்​ணிக்கை 6,800 ஆகவும் அதி​கரித்​துள்​ளது.

பெருங்​குடி, ஜிஎஸ்டி சாலை மற்​றும் ரேடியல் ரோடு–பள்​ளிக்​கரணை உள்​ளிட்ட முக்​கிய வணிக மையங்​களில் அமைந்​துள்ள இந்த வளாகங்​கள், நெகிழ்​வான பணி​யிடங்​கள் மற்​றும் நிர்​வகிக்​கப்​பட்ட அலு​வல​கத் தீர்​வு​களை ஒருங்​கிணைத்து நிறு​வனங்​களின் பல்​வேறு தேவை​களை பூர்த்தி செய்​யும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளன.

SCROLL FOR NEXT