புதுடெல்லி: ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிக ரீதியிலான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை வணிகக் கட்டணம் (எம்டிஆர்) விதிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனை எதிர்த்து அஞ்சன் தத்தா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், யுபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டணங்கள் சாமானிய மக்களைப் பாதிக்கும்.
குறிப்பாக வணிக நிறுவனங்கள் இந்தக் கூடுதல் செலவுகளை நுகர்வோர் மீது சுமத்தக்கூடும். எனவே,் புதிய நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.