சென்னை: இ20 பெட்ரோலை நுகர்வோர்கள் எந்தவித அச்சமும் இன்றி, பயன்படுத்தலாம் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தீவிர சோதனைகளுக்குப் பிறகு, எரிபொருளின் தரம் மத்திய அரசின் கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே இருப்பதாகத் தெரிவிக்கப்
பட்டுள்ளது. 500 பிபிஎம் குளோரைடு இருப்பதாகக் கூறப்பட்ட புகார்கள் தவறானவை. சோதனையில் குளோரைடு அளவு 0 முதல் 3 பிபிஎம் என்ற பாதுகாப்பான அளவிலேயே உள்ளது.
பெட்ரோல் பங்க்குகளில் தினசரி 8 முதல் 12 முறை தண்ணீர் கசிவு சோதனைகள் தீவிரமாக நடத்தப்படுகின்றன. எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சிஹெச்டி (CHT) அமைப்பின் கூட்டுப் பணிக்குழு 80 எத்தனால் ஆலைகளில் நேரடி ஆய்வு மேற்கொண்டு தரத்தை உறுதி செய்துள்ளது.
நுகர்வோர்கள் எந்தவித அச்சமும் இன்றி, முழு நம்பிக்கையுடன் இ 20 (E20) பெட்ரோலைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.