வணிகம்

காஷ்மீரில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் உமர் அப்துல்லா கோரிக்கை

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறையை மேம்​படுத்த ஒரு உலர் துறை​முகம் (உள்​நாட்​டுத் துறை​முகம்) அமைத்​துத் தர வேண்​டும் என்று மத்​திய அரசுக்கு முதல்​வர் உமர் அப்துல்லா கோரிக்கை விடுத்​துள்​ளார்.

ஜம்மு - ஸ்ரீநகர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்க விழா ஜம்மு ரயில் நிலை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில் முதல்​வர் உமர் அப்​துல்லா பேசி​ய​தாவது: ஜம்​முவை​யும் காஷ்மீரை​யும் ரயில் போக்​கு​வரத்து மூலம் இணைத்​ததற்​காக மத்திய அரசுக்​கும் ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவுக்கும் ஜம்மு காஷ்மீர் மக்​கள் சார்​பில் நன்றி தெரிவிக்கிறேன்.

ரயில் இணைப்பு வசதி​யால் சிமென்ட், கார்​கள் போன்ற பொருட்களை ரயில் மூலம் கொண்டு செல்ல முடி​யும். வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறைக்கு இது மிகப்​பெரிய ஊக்​கத்தை அளிக்கும். ஜம்மு காஷ்மீரில் இருந்து பொருட்​களை ஏற்​றுமதி செய்​வதற்​கான சுங்​கச் சோதனை​களை எளி​தாக்​கும் வகை​யில் இங்கு உள்​நாட்டு துறை​முகத்தை அதாவது உலர் துறை​முகத்தை மத்​திய அரசு அமைத்து தரவேண்​டும்.

இதன் மூலம் இங்​கிருந்து ஏற்​றுமதி செய்​யப்​படும் பொருட்களுக்கு, பிற நகரங்​களுக்​குச் சென்று சுங்​கச் சோதனை அனு​மதி பெற வேண்​டிய தேவை இருக்​காது. சுங்​கச் சோதனை நடை​முறை​களை ஜம்மு காஷ்மீரிலேயே முடிக்க முடி​யும். இது எங்கள் வர்த்​தகம் மற்​றும் தொழில்​துறைக்கு பெரிதும் பயனளிக்கும். நாங்​கள் பல ஆண்​டு​களாக ஜம்​மு​விலிருந்து ஸ்ரீநகருக்கு ரயி​லில் பயணம் செய்​யக் காத்​திருந்​தோம்.

இப்​போது, நாங்​கள் ஜம்​மு​விலிருந்து கத்​ரா​வுக்​கும் மறு​புறம் கத்​ரா​விலிருந்து ஜம்​முவுக்​கும் சாலை வழி​யாகப் பயணிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. இப்​போது இந்த ரயில் 8 பெட்​டிகளி​லிருந்து 20 பெட்​டிகளாக மாற்​றப்​பட்​டுள்​ளது. முன்பு 500 பயணி​கள் மட்​டுமே பயணம் செய்து வந்த நிலை​யில், இப்​போது 1,400 பேர் இதன் மூலம் பயணிக்க முடி​யும். இது எங்​களுக்கு ஒரு மிகப்​பெரிய விஷய​மாகும். இவ்​வாறு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறினார்.

SCROLL FOR NEXT