வணிகம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது: இன்றைய விலை நிலவரம்

வேட்டையன்

சென்னை: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இரண்டு முறை ஏற்றம் கண்ட தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சம் தாண்டி விற்பனையானது.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்​ண​யிக்​கப்​படுகி​றது. அமெரிக்​கா​வில் இறக்குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்தது. அந்த வகையில் நேற்று மாலை நேர சந்தை நிலவரப்படி ஒரு பவுன் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,00,120 என இருந்தது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை ரூ.1 லட்சம் தாண்டி இருந்தது. கடந்த ஜனவரி 22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.60,000 என விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை இன்று (டிச.16) கிராமுக்கு ரூ.165 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,350-க்கும், பவுனுக்கு ரூ.1,320 குறைந்து ஒரு பவுன் ரூ.98,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் வரும் வரும் நாட்களில் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளதாக வணிக துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர். சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,07,784 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.82,400-க்கும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை: வெள்ளி விலை இன்று காலை, கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.211-க்கும், ஒரு கிலோ ரூ.2,11,000-க்கும் விற்பனை ஆகிறது.

SCROLL FOR NEXT