ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

 
வணிகம்

இந்திய பொருளாதார வளர்ச்சி இந்தோ - பசிபிக் பகுதிக்கு சிறந்த வாய்ப்பு: ஆஸி. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டு

செய்திப்பிரிவு

கான்பெரா: இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி இந்​தோ-பசிபிக் பிராந்​தி​யத்​துக்கு மிகச் சிறந்த வாய்ப்பு என ஆஸ்திரேலியப் பிரதமர் அந்​தோணி அல்​பானீஸ் பாராட்டு தெரிவித்​துள்​ளார்.

ஆஸ்​திரேலி​யா​வின் கான்​பெரா நகரில் உள்ள நாடாளு​மன்​றத்​தில் அந்​நாட்டு பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் நேற்று பேசி​ய​தாவது: இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி சிறப்​பாக உள்​ளது. உலகிலேயே அதிக மக்​கள் தொகை​யைக் கொண்​டுள்ள இந்​தி​யா, அடுத்த பத்​தாண்​டு​களில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாற உள்​ளது. இந்​தி​யா​வின் பொருளா​தார வளர்ச்சி நம்​முடைய இந்​தோ-பசிபிக் பிராந்​தி​யத்​துக்கு மிகச் சிறந்த வாய்ப்​பு.

2022-ல் கையெழுத்​தான வர்த்தக ஒப்​பந்​தம் இரு​நாட்டு உறவை மேம்​படுத்​தி​யுள்​ளது. கலாச்​சா​ரம், கல்வி மற்​றும் கிரிக்​கெட் ஆகிய​வற்​றின் மூலம் இரு நாடு​களும் மேலும் நெருக்கமடைந்துள்ளன. 1991-ல் ஒரு சாதாரண பயணி​யாக இந்தியா​வுக்கு நான் சென்​றதை இப்​போது நினைவு கூர்​கிறேன். இந்​திய மக்​களின் அன்பை நேரடி​யாகக் காண்​பது ஒரு அற்புதமான அனுபவம். அதே​போல், பிரதமர் மோடியை விரைவில் இங்கு வரவேற்​ப​தற்​கான பாக்​கி​யத்தை நான் பெறு​வேன்.

இந்த பாக்​கி​யத்தை 2-வது முறை​யாக மீண்​டும் பெறு​வதை நான் எதிர்​நோக்​கி​யுள்​ளேன். ஆஸ்​திரேலி​யா​வில் வசிக்​கும் 10 லட்​சம் இந்​திய வம்​சாவளி​யின​ரால் பிரதமர் மோடி​யின் இந்த வருகை மிக​வும் சிறப்​பான​தாக மாறும். இந்​தி​யச் சமூகம் எங்​கள் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்​தி​யுள்​ளது. உங்​களுக்​காக எங்​கள் அரசு எப்​போதும் துணை​யாக நிற்​கும். இவ்​வாறு அந்தோணி அல்பானீஸ் தெரி​வித்​தார்.

முன்​ன​தாக, குவாட் மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக இந்​தியா வந்திருந்த ஆஸ்​திரேலிய வெளி​யுறவு அமைச்​சர் பென்னி வாங், பிரதமர் மோடி மற்​றும் வெளி​யுறவு அமைச்​சர் எஸ்.ஜெய்​சங்​கர் ஆகியோரைச் சந்​தித்து இருதரப்பு உறவை பலப்​படுத்​து​வது குறித்து விவா​தித்​தார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT