வணிகம்

ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2.93 லட்சம் கோடி: தமிழகத்துக்கு 2 புல்லட் ரயில்கள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு ரூ.2.93 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 7 புல்லட் ரயில் திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள், புதிய வழித்தடங்கள், போக்குவரத்து வசதிகள் போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ரூ.2,93,030 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2,78,030 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு ரயில்வே துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

          

மேலும், 7 புதிய புல்லட் ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு 2 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை - ஹைதராபாத் மற்றும் சென்னை பெங்களூரு இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மும்பை-புனே, புனே-ஹைதராபாத், ஹைதராபாத்-பெங்களூரு, டெல்லி-வாராணசி, வாராணசி சிலிகுரி ஆகிய தடங்களிலும் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT