தமிழகம், கேரளா,  ஆந்திரா, ஒடிசாவில் தாதுக்களை எடுத்துச் செல்ல தனி வழித்தடம்

தமிழகம், கேரளா,  ஆந்திரா, ஒடிசாவில் தாதுக்களை எடுத்துச் செல்ல தனி வழித்தடம்
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா ஆகிய 4 மாநிலங்​களில் அரிய வகை தாதுக்களை பிரித்தெடுத்து, சுத்திகரித்து எடுத்துச் செல்லும் விதமாக தனி வழித்​தடம் உரு​வாக்​கப்​படும் என்று மத்​திய பட்​ஜெட்​டில் அறி​விக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, ஒடி​சா ஆகிய 4 மாநிலங்​களை இணைக்​கும் வகை​யில் பிரத்​யேக வழித்​தடங்​கள் (Dedicated Rare Earth Corridors) அமைக்​கப்பட உள்​ளன. கடற்​கரை ஓரங்​களில் அதி​கப்​படி​யான கனிம மணல் இருப்பு கொண்ட தமிழகம், கேரளா, ஆந்​தி​ரா, ஒடிசா ஆகிய மாநிலங்​கள் இதன் மூலம் ஒருங்​கிணைக்​கப்​படும்.

தற்​போது அரிய வகை தாதுக்களுக்கு சீனா போன்ற நாடு​களை அதி​கம் நம்​பியிருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில், இறக்​கும​தி​யைக் குறைத்​து, உள்​நாட்​டிலேயே அரிய வகை தாதுக்களை பிரித்​தெடுத்​தல் மற்​றும் சுத்​தி​கரிப்பு ஆலைகளை அமைக்க இத்​திட்​டம் வகை செய்​யும்.

இதற்​காக ரூ.7,280 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழித்​தடம் மூலம் தயாரிக்​கப்​படும் அரியவகை காந்​தங்​கள், கனிமங்​கள் ஆகியவை மின்​சார வாக​னங்​கள், விண்​வெளி ஆராய்ச்​சி, பாது​காப்பு உபகரணங்​கள், காற்​றாலை மின் உற்பத்திக்கு முது​கெலும்​பாக அமை​யும்.

50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள்: இந்த பிரம்​மாண்ட திட்​டத்​தின் மூலம் சுமார் 50,000 புதிய வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாகும். இதில் தனி​யார் முதலீடு​களை ஈர்க்​கவும், அரிய வகை தாதுக்​களுக்​கான தனி இயக்​கத்தை (Rare Earth Critical Minerals Mission) உரு​வாக்​க​வும் பட்​ஜெட்​டில் நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழித்​தடங்​கள் நாட்டின் சுய​சார்பு பொருளா​தா​ரத்​துக்கு புதிய உத்​வேகத்தை அளிக்​கும்.

தமிழகம், கேரளா,  ஆந்திரா, ஒடிசாவில் தாதுக்களை எடுத்துச் செல்ல தனி வழித்தடம்
தொடர்ச்சியாக 9-வது முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்: தனிநபர் வருமான வரியில் மாற்றம் இல்லை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in