வணிகம்

ரஷ்யா - உக்ரைன் போர் | உலக அளவிலான பொருளாதார தாக்கம் என்ன? - ஒரு பார்வை

செய்திப்பிரிவு

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி ஏறத்தாழ ஐந்து மாதங்கள் ஆகின்றன. இன்னும் போர் முடிவதாக தெரியவில்லை. இந்தப் போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உக்ரைனில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன.

பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய பொருளாதாரமும் முடங்கி இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் இந்தப் போர் ரஷ்யா மற்றும் உக்ரைனிலும், உலக அளவிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

உணவும் பொருளாதாரமும்: உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம்,சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் இந்த ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

இதனால், இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதோடு, இவ்விரு நாடுகளிலிருந்து உணவுப் பொருள்கள் இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகள் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டன.

விளைவாக, சர்வதேச அளவில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் பணவீக்கத்துக்கும் இது காரணமாக அமைந்தது.

உள்கட்டமைப்புச் சேதாரம்: ஐரோப்பிய நகரங்களில் மிகவும் செலவு குறைந்த நகரம் உக்ரைன். இங்கு போக்குவரத்துக் கட்டணம் மிகவும் குறைவு. இந்தப் போரால் உக்ரைனின் உள்கட்டமைப்பில் 30 சதவீதம் தரைமட்ட மாக்கப்பட்டிருக்கிறது.

8,000 கிலோ மீட்டர் அளவில் சாலை தகர்க்கப்பட்டிருக்கிறது. 300-க்கு மேற்பட்ட மேம்பாலங்கள், 4,430 குடியிருப்புகள், 92 தொழிற்சாலைகள், 378 பள்ளிகள், 138 மருத்துவமனைகள், 12 விமானநிலையங்கள், 7 அனல்மின் நிலையங்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. இதன் மறைமுக இழப்பு 600 பில்லியன் டாலர்.

கச்சா எண்ணெய் வர்த்தகம்: ரஷ்யா உலக அளவில் இயற்கை எரிவாயு உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாகவும் எண்ணெய் உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாகவும் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் அவற்றின் பெட்ரோலியத் தேவையில் ரஷ்யாவை பெருமளவில் சார்ந்திருந்தன. தற்போது ரஷ்யாவின் எரிசக்திக்கு விதிக்கப்பட்ட தடையால் ஐரோப்பிய நாடுகள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

‘நாம் போரை முடித்துக் கொள்ளாவிட்டால், போர் நம்மை அழித்துவிடும்’ என்று எழுத்தாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது.

> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT