வங்கியில் கடன் கேட்டுச் செல்லும் போது, கடனுக்கு ஈடாக கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பார்கள் என்பது நமக்குத் தெரியும். அப்படி கேட்கும் போது சிலர் தங்களிடமுள்ள விவசாய நிலத்தை கொலாட்ரல் செக்யூரிட்டியாக தருவதாக சொல்லலாம். அதை வங்கிகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் சர்ஃபேசி என்கிற சட்டத்தின் கீழ் அதனை இணைக்க முடியாது என்பதால் விவசாய நிலங்களை வங்கிகள் கொலாட்ரல் செக்யூரிட்டியாக விரும்புவதில்லை.
லீகல் ஒப்பீனியன் (Legal Opinion): அதேபோல கிராமங்களில் இருக்கும் வீடுகளையும் வங்கிகள் கொலாட்ரல் செக்யூரிட்டியாக விரும்புவது இல்லை. வங்கிள் கொலாட்ரல் செக்யூரிட்டி கேட்பதன் நோக்கமே, கடன்பெற்றவரால் ஒருவேளை கடனைத் திருப்பி செலுத்த முடியாவிட்டால், கடனுக்கு ஈடாக வைக்கப்பட்ட சொத்தை விற்று பணத்தை கடன் தொகையை வங்கி பெற்றுக்கொள்ளும். அப்படி கொலாட்ரலாக தரப்படும் அசையா சொத்து வில்லங்கம் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்காக வங்கிகள் லீகல் ஒப்பீனியன் கேட்கும்.
அதாவது கடனுக்கு அடமானமாக வைக்கப்படும் சொத்து கடன் வாங்குபவரின் பெயரில் தான் இருக்கிறதா, அந்த சொத்தை விற்கவேண்டிய சூழல் வரும்போது பிரச்சினை ஏதும் வருமா, அந்த சொத்தை விற்க முடியுமா போன்ற விபரங்களை வங்கி சரிபார்ப்பதற்கு பெயர் தான் லீகல் ஒப்பீனியன்.
இதில் முக்கியமான ஒன்று வங்கிக்கடன் வாங்கும் போது சொந்த சொத்தையோ, சொந்தக்காரர்களின் சொத்தையோ கடனுக்கு ஈடாக தரலாம். சிலர் மூன்றாவது நபரின் சொத்தை அடமானமாக தரும் சம்பவங்களும் நடைபெறுவது உண்டு. இதனால் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம்.
அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்: வங்கிகள் அசையா சொத்துக்களை அடமானமாக பெரும்போது இரண்டு விஷயங்களை வாடிக்கையாளரிடம் கேட்கும். ஒன்று லீகல் ஒப்பீனியன், இரண்டாவது வேல்யூயேஷன் ரிப்போர்ட்.
இந்த லீகல் ஒப்பீனியன், டைட்டில் வெரிஃபிகேசன் ரிப்போர்ட், வக்கீல் ரிப்போர்ட் என்று அழைக்கப்படுகிறது. வக்கீல் ரிப்போர்ட்டை பொறுத்தவரையில் வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், வாடிக்கையாளருக்கு தெரிந்த அல்லது வேறு ஏதாவது வக்கீலிடம் ஒப்பீனியன் வாங்கி விட முடியாது. வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட வக்கீல்களிடம் தான் ஒப்பீனியன் வாங்க முடியும்.
> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்