வணிகம்

ஒரே கடனாளி - ஒரே வங்கி: வியாபாரத்தைப் பெருக்க உதவும் நடப்புக் கணக்கு!

செய்திப்பிரிவு

வங்கிகளில் புழங்கும் வார்த்தைகளில் ஒன்று எக்ஸ்க்ளூசிவ் டீலிங். சில நேரங்களில் வங்கிகளில் கண்டிஷன் ஆஃப் எக்ஸ்க்ளூசிவ் டீலிங் இருக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. அதாவது, ‘ஒரு கடனாளி - ஒரு வங்கி’ என்பதே இதன் மறைபொருள். கடன் பெறுபவர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் பெறக்கூடாது என்பதில்லை. கணக்கே வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இதற்கு அர்த்தம்.

சேமிப்பு கணக்கு இல்லை, கரன்ட் அக்கவுன்ட் எனப்படும் நடப்பு கணக்கு. அதாவது, வியாபாரம் செய்பவர்கள் ஒரே வங்கியில் தனது அனைத்து கணக்குப் பரிமாற்றங்களையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எக்ஸ்க்ளூசிவ் டீலிங்க்.

முதலில் இதற்கான காரணத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் ரூ.10 லட்சத்திற்கு "கேஷ் கிரெடிட்" கடன் வாங்குகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் மற்றொரு வங்கியில் கரன்ட் அக்கவுண்ட் தொடங்கி அனைத்து வரவு செலவுகளையும் அந்த வங்கியிலேயே வைத்திருக்கிறார் என்றால், அது மிகப்பெரிய தவறு. அப்படி இருக்கும்போது கடன் கொடுத்த வங்கிக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது.

அதனால்தான் யார் ஒருவர் கேஷ் கிரெடிட் அல்லது ஓவர் டிராஃப்ட் வாங்குகிறார் என்றால் அந்த வங்கியில் மட்டுமே நடப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. வியாபாரத்தில் வரும் விற்பனையை அந்தக் கடன் தொகையில் செலுத்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

வங்கி கண்காணிக்கும்: வங்கிகள் ஏனோதானோ என்று வங்கிக் கணக்குகளை தொடங்கக் கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தற்போது கண்டிப்பான முறையில் வங்கிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. சில வரிகளை பாரத ஸ்டேட் வங்கி மூலம் மட்டுமே செலுத்த முடியும் என்று இருக்கும். அந்த வரிகளுக்கான தொகையினை மட்டும் ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். வேறு எந்த பணப்பரிமாற்றங்களையும் செய்யக் கூடாது. இதனை கடன் கொடுத்த வங்கி கண்காணிக்கும். இதனைத் தவிர வேறு ஏதாவது பணப் பரிமாற்றத்தில் வங்கிகள் ஈடுபடுமானால் அந்த வங்கி மீது குற்றம் சுமத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஒரே கடனாளி - ஒரே வங்கி: தற்போது இணையவழி தொடர்புகளும், பரிமாற்றங்களும் அதிகரித்துவிட்டன. கணினி மூலமாக வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி போன்றவைகள் தகவல்களை எடுத்துக் கொள்கின்றன. அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட நடப்புக் கணக்கு இருந்தால் அவைத் தெரிந்து விடும். அதனால் கடன் பெறும் போது வங்கி, ரிசர்வ் வங்கி சொல்கிற படி கடன் பெறும் வங்கியிலேயே நடப்புக் கணக்கு தொடங்கி எக்ஸ்க்ளூசிவ் டீலிங்களை ஏற்றுக்கொண்டு, ஒரு கடனாளி - ஒரே வங்கி என்ற கொள்கையை கடைபிடித்து வியாபாரத்தைப் பெருக்குங்கள்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

SCROLL FOR NEXT