வணிகம்

80,000 டன் கச்சா எண்ணெய் உடன் முந்த்ரா துறைமுகம் வந்தது ‘ஜக் லாட்கி'

செய்திப்பிரிவு

அகமதாபாத்: இந்​தி​யக் கொடி​யுடன் கூடிய 80,000 டன் கச்சா எண்​ணெய் ஏற்​றிய 'ஜக் லாட்​கி' கப்​பல் குஜராத்​தில் உள்ள அதானி முந்த்ரா துறை​முகத்தை வந்​தடைந்​துள்​ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படை ஈரான் மீது தாக்​குதல் நடத்தி வரு​வ​தால் உலக நாடு​களுக்கு சரக்​குக் கப்​பல் செல்​லக் கூடிய ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்​டுள்​ளது. இதனால் கச்சா எண்ணெய், எரி​வாயு போக்​கு​வரத்து முடங்கி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்​பட்​டுள்​ளது.

          

இந்த சூழலில் மத்​திய அரசு மேற்​கொண்ட முயற்​சி​யால் இந்​தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்து செல்ல ஈரான் சிறப்பு அனு​மதி கொடுத்​தது. இதையடுத்து மொத்​தம் 92,712 டன் எல்​பிஜி உடன் ஷிவாலிக் என்ற டேங்​கர் கப்​பலும் (மார்ச் 16) சுநந்தா தேவி (மார்ச் 17) என்ற மற்​றொரு டேங்​கர் கப்​பலும் அடுத்​தடுத்து இந்தியா வந்து சேர்ந்​தன.

இந்​நிலை​யில், இந்​தி​யக் கொடியேந்தி 'ஜக் லாட்​கி' கப்​பல் சுமார் 80,886 டன் கச்சா எண்​ணெயுடன் நேற்று முந்த்ரா துறை​முகத்தை வந்​தடைந்​தது. இந்த சரக்கு கப்​பல் ஐக்​கிய அரபு அமீரகத்​தின் ஃபுஜைரா துறை​முகத்​தில் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு புறப்​பட்​டது. 22 கப்​பல் பாது​காப்​பாக உள்​ளது.

கப்​பல் போக்​கு​வரத்து அமைச்​சகத்​தின் கூடு​தல் செய​லா​ளர் ராஜேஷ் குமார் சின்ஹா நேற்று கூறும்​போது, "தற்​போது ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே 22 இந்​தி​யக் கப்​பல்​களில் உள்ள 611 நபர்​கள் உட்​பட, அனைத்து இந்​தி​யக் கப்​பல்​களும் இந்​தி​யக் குடிமக்​களும் பாது​காப்​பாக உள்​ளனர். இது​வரை அசம்பாவிதங்கள் ஏதும் பதி​வாக​வில்​லை.

கடந்த 24 மணி நேரத்​தில், அந்​தப் பிராந்​தி​யத்​தின் பல்​வேறு துறை​முகங்​கள் மற்​றும் இடங்​களி​ல் இருந்து வெளி​யேறு​வதற்​கான நடை​முறை​கள் முடிக்​கப்​பட்​டு, 25 இந்​தி​யர்​கள் தாயகம் அழைத்து வரப்​பட்​டுள்​ளனர். ஏற்​கெனவே இந்​தியா வந்த சிவாலிக் மற்​றும் நந்​தா தேவி ஆகிய கப்​பல்​களில் இருந்து எல்​பிஜி சரக்​கு​களை இறக்​கும் பணி தற்​போது நடைபெற்​று வருகிறது" என்​றார்​.

SCROLL FOR NEXT