வணிகம்

டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல் கட்டணம் பல மடங்கு உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் பங்​கேற்க உலக தலை​வர்​கள், பிர​தி​நி​தி​கள், அதி​காரி​கள் வந்​திருந்​தனர். அவர்​கள் தங்​கு​வதற்​காக 5 நட்​சத்​திர ஓட்​டல்​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட அறை​கள் முன்​ப​திவு செய்​யப்​பட்​டிருந்​தன.

இதனால், சில ஓட்​டல்​களில் ஒரு நாள் கட்​ட​ணம் பல லட்​சங்​களாக அதி​கரித்​தது. இணை​யதளத்​தில் தேடிய​போது, டெல்லி லீலா பேலஸில் ஒரு அறைக்​கான ஒரு நாள் கட்​ட​ணம் ரூ.6.2 லட்​சம், ஐடிசி மவுரி​யா​வில் ரூ.2.5 லட்​சம், தி லோதி​யில் ரூ.1.2 லட்​சம், லீ மெரிடியனில் ரூ.1 லட்​சம் வரை உயர்ந்​திருந்​தது தெரிய​வந்​துள்​ளது.

SCROLL FOR NEXT