வணிகம்

புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் விநியோகம் 2 மடங்காக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: புலம்​பெயர் தொழிலா​ளர் நலனுக்​காக மாநிலங்களுக்​கான 5 கிலோ சமையல் காஸ் சிலிண்​டர் விநியோகம் 2 மடங்​காக அதி​கரிக்​கப்​பட்டுள்​ளது.

அமெரிக்​கா, ஈரான் இடையி​லான போர் காரண​மாக சமையல் காஸ் சிலிண்​டர்​களுக்கு (எல்​பிஜி) தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்ளது. இதனால் டெல்​லி, மும்​பை, சூரத் உள்​ளிட்ட நகரங்​களில் பணியாற்றி வரும் புலம்​பெயர் தொழிலா​ளர்​கள் சொந்த ஊருக்கு திரும்பி வரு​கின்​றனர். இந்த பிரச்​சினைக்கு தீர்வு காணும் வகையில் 5 கிலோ எல்​பிஜி சிலிண்​டர்​களை பெறு​வதற்​கான நடை​முறை​களை எண்​ணெய் நிறு​வனங்​கள் எளிமைப்​படுத்தி உள்​ளன.

          

ஆதார், பான், ஓட்​டுநர் உரிமம் ஆகிய​வற்​றில் ஏதாவது ஓர் அடையாள அட்​டையை காண்​பித்து காஸ் விநி​யோக நிறுவனங்களிடம் இருந்து 5 கிலோ சிலிண்​டரை எளி​தாக பெற்றுக் கொள்​ளலாம். முன்​தொகை செலுத்த தேவை​யில்லை என்று அறிவிக்​கப்​பட்டு இருக்​கிறது. இதைத் தொடர்ந்து 5 கிலோ சிலிண்​டர் விநி​யோகத்தை அதி​கரிக்க மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் நடவடிக்கை எடுத்​திருக்​கிறது.

இது குறித்து அந்த அமைச்​சகத்​தின் செய​லா​ளர் நீரஜ் மிட்​டல் வெளி​யிட்ட அறிக்​கை​யில், ”புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்​காக மாநிலங்​களுக்கு 5 கிலோ எல்​பிஜி சிலிண்​டர்​கள் விநி​யோகம் செய்​யப்​படு​கின்​றன. தற்​போதைய சூழலை கருத்​தில் கொண்டு 5 கிலோ சிலிண்​டர்​களின் விநி​யோகம் இரு மடங்​காக அதிகரிக்கப்பட்டு உள்​ளது. காஸ் விநி​யோக நிறு​வனங்​கள் மூலம் புலம்​பெயர் தொழிலா​ளர்​களுக்கு தட்​டுப்​பாடு இன்றி 5 கிலோ சிலிண்​டர்​களை வழங்க வேண்​டும். இதை அந்​தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்​டும்” என கூறப்​பட்டு உள்​ளது.

SCROLL FOR NEXT