வணிகம்

300 இண்டிகோ விமான சேவைகள் ரத்து: இரண்டாவது நாளாக பயணிகள் தவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யா​வின் முக்​கிய விமானப் போக்​கு​வரத்து நிறு​வனங்​களில் ஒன்​றான இண்​டிகோ நிறு​வனம் சமீப கால​மாக விமானம் தாமதம், விமான சேவை ரத்து என தீவிர பிரச்​சினை​களை எதிர்​கொண்டு வரு​கிறது.

இந்​நிலை​யில் விமானிகள் உள்​ளிட்ட பணி​யாளர் பற்​றாக்​குறை மற்​றும் மென்​பொருள் கோளாறு காரண​மாக நேற்று முன்​தினம் 200-க்​கும் மேற்​பட்ட விமான சேவை​களை இண்​டிகோ நிறு​வனம் ரத்து செய்​தது. இதனால் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் பாதிக்​கப்​பட்​டனர். இந்​நிலை​யில் இண்​டிகோ விமான சேவை​யில் நேற்று இரண்​டாவது நாளாக பிரச்​சினை​கள் நீடித்​தன.

டெல்​லி, மும்​பை, பெங்​களூரு உள்​ளிட்ட பல விமான நிலை​யங்​களில் 300-க்​கும் மேற்​பட்ட உள்​நாட்டு மற்​றும் சர்​வ​தேச விமானங்​களை இண்​டிகோ நிறு​வனம் நேற்று ரத்து செய்​தது. மேலும் பல்​வேறு விமான நிலை​யங்​களில் இண்​டிகோ விமான சேவை​யில் தாமதம் ஏற்​பட்​டது. இதனால் ஆயிரக்​கணக்​கான பயணி​கள் தங்​களின் பயணத் திட்​டம் பாதிக்​கப்​பட்டு தவிப்​புக்கு ஆளாகினர்.

இந்​நிலை​யில் விமானம் ரத்​து, தாமதம் போன்ற தற்​போதைய சூழ்​நிலைக்​கான காரணங்​கள் மற்​றும் இப்​பிரச்​சினை​களை தீர்ப்​ப​தற்​கான திட்​டங்​கள் குறித்து அறிக்கை அளிக்​கு​மாறு இன்​டிகோ நிறு​வனத்​திடம் சிவில் விமானப் போக்​கு​வரத்து இயக்​குநரகம் நேற்று கேட்​டுக்​கொண்​டுள்​ளது.

இந்​நிலை​யில் சிறிய தொழில்​நுட்​பக் கோளாறுகள், பயண அட்​ட​வணை மாற்​றங்​கள், பாதக​மான வானிலை, விமானப் போக்​கு​வரத்​தில் அதி​கரித்த நெரிசல் மற்​றும் புதி​தாக வெளி​யிடப்​பட்ட எப்​டிடிஎல் விதி​முறை​கள் காரண​மாக தற்​போதைய நெருக்​கடி ஏற்​பட்​டுள்ளது என்று இண்​டிகோ தலைமை செயல் அதி​காரி பீட்​டர் எல்​பர்ஸ் கூறி​யுள்​ளார்.

விமானிகள் பணிநேர வரம்பு தொடர்​பான திருத்​தப்​பட்ட விதி​முறை​கள் கடந்த மாதம் அறி​முகம் செய்​யப்​பட்​டது. இது விமானிகள் பணி நேரம் மற்​றும் ஓய்வு நேரத்தை வரையறுக்​கிறது. இதற்​கிடை​யில் சவுதி அரேபி​யா​வின மதீ​னா​வில் இருந்து நேற்று ஹைத​ரா​பாத் நோக்கி வந்த இண்​டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்​டல் காரண​மாக அகம​தா​பாத்​துக்கு திருப்பி விடப்​பட்​டது. இதையடுத்​து நடை​பெற்​ற சோதனை​யில்​ இது புரளி எனத்​ தெரிய​வந்​தது.

SCROLL FOR NEXT