வணிகம்

சென்னை காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288 கோடியில் 2-வது முனையம்: மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை காமராஜர் துறைமுகத்​தில் ரூ.4,288 கோடியில் 2-வது முனை​யம் அமைக்க மத்திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

சென்னை எண்​ணூரில் அமைந்​துள்ள காம​ராஜர் துறை​முகத்​தில் ரூ.4,288.26 கோடி மதிப்​பீட்​டில் இரண்​டாவது சரக்கு பெட்டக (கன்டெய்​னர்) முனை​யம் அமைக்க பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​தி​யப் பொருளா​தார விவ​காரங்​களுக்​கான அமைச்​சர​வைக்குழு ஒப்​புதல் அளித்​துள்​ளது. இந்​தத் திட்​டம் அரசு மற்​றும் தனி​யார் பங்​களிப்​புடன் ‘வடிவ​மைத்​து, கட்​டி, நிதியளித்து, இயக்​கி, ஒப்​படைக்​கும்’ (டிபிஎப்​ஓடி) அடிப்​படை​யில் 40 ஆண்டு கால ஒப்​பந்​தத்​தில் செயல்​படுத்​தப்பட உள்​ளது.

900 மீட்​டர் நீள​முள்ள கப்​பல் நிறுத்​து​மிடம் மற்​றும் 18 மீட்​டர் ஆழத்துடன் இந்த முனை​யம் அமைக்​கப்பட உள்​ளது. இதன் மூலம் ஆண்​டுக்கு 20 லட்​சம் கன்​டெய்​னர்​களை கையாளும் திறன் அதிகரிக்​கும்.

மேலும், 24,346 கன்​டெய்​னர்​கள் வரை சுமந்து செல்லும் மிகப்​பெரிய சரக்​குக் கப்​பல்​களும் இங்கு வந்து செல்ல முடி​யும். முனை​யம் அமைப்​ப​தற்​கான ரூ.4,288.26 கோடி செலவைத் தனியார் ஒப்​பந்​ததா​ரர் ஏற்​றுக்​கொள்​வார்.

தூர்​வாரும் பணி​களுக்​கான ரூ.450 கோடி செல​வைக் காம​ராஜர் துறை​முக நிர்​வாகம் தனி​யாக ஏற்​கும். கன்​டெய்​னர் முனை​யம் அமைப்​ப​தற்​கான இத்​திட்​டம் இரண்டு கட்​டங்​களாக செயல்படுத்தப்பட உள்​ளது. முதல் கட்​டத்​தில் ரூ.2,429.32 கோடி செல​வில் 11 லட்​சம் கன்​டெய்​னர் திறன் உரு​வாக்​கப்​படும். முதல் கட்​டப் பணிகள், ஒப்​பந்​தம் வழங்​கப்​பட்ட தேதியி​லிருந்து 24 மாதங்​களுக்​குள் நிறைவடை​யத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

வணி​கச் செயல்​பாடு​கள் 25-வது மாதத்​தில் தொடங்​கும். இரண்டாம் கட்​டத்​தில் ரூ.1,858.94 கோடி செல​வில் 9 லட்​சம் கன்டெய்​னர் திறன் உரு​வாக்​கப்​படும். இதற்​கான பணி​கள் 25-வது மாதத்​தில் தொடங்கி 48-வது மாதம் வரை நடை​பெறும். 49-வது மாதத்​தில் முழு அளவி​லான வணி​கச் செயல்​பாடு​கள் தொடங்கும்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT