வணிகம்

சர்வதேச ரயில் பெட்டி கண்காட்சி: இந்தியா உட்பட 8 நாடுகளை சேர்ந்த 120 நிறுவனங்கள் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: ஐசிஎஃப்​-ல் சர்​வ​தேச ரயில் பெட்டி கண்காட்சி தொடங்​கி​யுள்​ளது. இதில் இந்​தியா உட்பட 8 நாடு​களை சேர்ந்த 120 நிறு​வனங்​கள் தங்​களது உபகரணங்​களை காட்​சிப்​படுத்​தி​யுள்​ளன.

இந்​திய தொழில்​துறை கூட்​டமைப்பு (சிஐஐ) மற்​றும் ஒருங்​கிணைந்த ரயில் பெட்டி தொழிற்​சாலை (ஐசிஎஃப்) சார்​பில் அடுத்த தலை​முறை ரயில் பெட்​டிகளின் வடிவ​மைப்பு, தொழில்​நுட்ப பகிர்வு குறித்த சர்​வ​தேச கண்காட்சி மற்​றும் தொழில்​நுட்ப மாநாடு, ஐசிஎஃப் வளாகத்​தில் நேற்று தொடங்​கியது.

          

ஐசிஎஃப் பொது​மேலா​ளர் சுப்​பா​ராவ் தொடங்கி வைத்து கண்காட்சியைப் பார்​வை​யிட்​டார். நாளை (மார்ச் 14) வரை நடை​பெறும் இக்கண்காட்சியில் மொத்​தம் 120 அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தியா உள்​ளிட்ட 8 நாடு​களைச் சேர்ந்த 120 முன்​னணி நிறு​வனங்​கள் தங்​களது தயாரிப்​பு​களை காட்​சிப்​படுத்​தி​யுள்​ளன. சாதாரண ரயில் பெட்​டிகள் முதல், இஎம்யு ரயில்​கள், அதிநவீன `வந்தே பாரத்' ரயில்​களுக்கு தேவை​யான சிறிய நட்​டு​களில் தொடங்​கி, ரயில் பெட்​டிகளின் பக்​க​வாட்டு சுவர்​கள், பெரிய அளவி​லான உதிரி​பாகங்​கள் வரை அனைத்​தும் காட்​சிக்கு வைக்​கப்​பட்​டுள்​ளன.

அதே​போல் மாநாட்​டில் அடுத்த தலை​முறைக்​கான நவீன ரயில் பெட்​டிகளை எவ்​வாறு உரு​வாக்​கு​வது என்​பது குறித்து விவா​திக்​கப்​பட்​டது. கண்காட்சி மற்​றும் மாநாட்டை தொடங்கி வைத்து ஐசிஎஃப் பொது மேலா​ளர் சுப்​பா​ராவ் பேசியதாவது: இந்​திய ரயில்வே ஆண்​டு​தோறும் 5 ஆயிரம் கிலோமீட்​டருக்கு புதிய பாதைகளை உரு​வாக்கி வரு​கிறது.

இதற்​காக ரூ.2.5 லட்​சம் கோடிக்​கும் அதி​க​மான நிதி ஒதுக்​கீடு செய்​யப்​படு​கிறது. குறிப்​பாக, கடந்த 10 ஆண்​டு​களில் மெட்ரோ ரயில் கட்​டமைப்பு 240 கி.மீட்​டரிலிருந்து ஆயிரம் கி.மீட்​ட​ராக உயர்ந்​துள்​ளது, விரை​வில் இது 2 ஆயிரம் கி.மீட்​ட​ராக விரிவுபடுத்​தப்​படும்.

‘கவாச்’ போன்ற உள்​நாட்டு பாது​காப்பு அமைப்​பு​கள், ஐஓடி மற்​றும் 5ஜி தொழில்​நுட்​பங்​கள் மூலம் ரயில்வே தடம் மாற்​றப்​பட்டு வரு​கின்​றன. மும்பை - அகம​தா​பாத் இடையே 250 கி.மீ. வேகத்​தில் செல்​லும் அதிவேக ரயில்​கள் மற்​றும் ஓட்​டுநர் இல்லா மெட்ரோ தொழில்​நுட்​பங்​கள் என இந்​தி​யா​வின் ரயில்வே எதிர்​காலம் மிகப்​பிரம்​மாண்​ட​மாக அமைய​வுள்​ளது.

இது​வரை 80 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ரயில் பெட்​டிகளைத் தயாரித்​துள்ள ஐசிஎஃப், காற்​றாலை மற்​றும் சூரிய எரிசக்தி மூலம் 18.65 மில்​லியன் யூனிட் மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்​து, தனது சொந்த தேவைக்​கும் அதி​க​மாக பசுமை ஆற்​றலைப்​ பெற்று சாதனை படைத்​துள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT