சென்னை: நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘பேங்க் ஆஃப் பரோடா’ வழங்கும் ‘தி இந்து ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026’ செப். 5, 6-ம் தேதிகளில் காலை 10 முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது.
45-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்களின் 200-க்கும் மேற்பட்ட திட்டங்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
அனுமதி இலவசம்
‘தி இந்து’ குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு ‘பேங்க் ஆஃப் பரோடா’வால் நடத்தப்படும் ‘ப்ராப்பர்ட்டி எக்ஸ்போ 2026’, வீடு வாங்குவோர், முதலீட்டாளர்கள் மற்றும் இடம் தேடுபவர்களுக்குப் பல்வேறு வகையான ரியல் எஸ்டேட் திட்டங்கள், முதலீட்டு வாய்ப்புகளை ஒரே இடத்தில் கண்டறியும் வாய்ப்பை வழங்குகிறது.
இதன் மூலம், புதிய திட்ட அறிமுகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்கள், மனைகள், பண்ணை நிலங்கள், தனி வீடுகள், முதலீட்டு வாய்ப்புகள் எனப் பலதரப்பட்ட தேர்வுகளைப் பார்வையாளர்கள் சென்னை மற்றும் அதன் வளர்ந்து வரும் பகுதிகளில் கண்டறியலாம்.
பல கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்பதால், வீடு வாங்க விரும்புவோர் திட்டப் பிரதிநிதிகளுடன் நேரடியாக உரையாடவும், திட்டத்தின் சிறப்பம்சங்களைத் தெரிந்து கொள்ளவும், இடங்கள் மற்றும் அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கவும், விலையை மதிப்பிடவும், பல்வேறு பிரிவுகளில் உள்ள வாய்ப்புகளை ஆராயவும் முடியும்.
நிகழ்ச்சியில் கிரெடாய் (CREDAI) சென்னையின் தலைவர் மெஹுல் எச்.தோஷி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்.
கிரெடாய் சென்னையின் செயலாளர் சுமன் வூரா, பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமைப் பொது மேலாளர் எம்.ரவீந்திர ராய் ஆகியோர் கவுரவ விருந்தினர் களாகப் பங்கேற்கின்றனர்.
‘தி இந்து’ ப்ராப்பர்ட்டி
எக்ஸ்போ 2026, சென்னையில் வீடு வாங்க விரும்புவோர் தங்கள் தேவைகளுக்கு ஏற்ற இடத்தைக் கண்டறிவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
(Link: newsth.live/PFC2026PA)