சென்னை: தமிழகத்தில் ரீகல் ஜுவல்லர்ஸின் முதல் ஷோரூமை தி.நகரில் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
தென்னிந்தியாவின் முன்னணி நகை உற்பத்தியாளர் மற்றும் மொத்த விற்பனை யாளரான ரீகல் ஜுவல்லர்ஸ், தமிழகத்தில் தனது முதல் ஷோரூமை சென்னை தி.நகரில் உள்ள வடக்கு உஸ்மான் சாலையில் திறந்துள்ளது. சட்டப்பேரவைத் தலை வர் ஜேசிடி பிரபாகர் திறந்து வைத்து ஷோரூமை பார்வையிட்டார். எம்எல்ஏ பி.எம்.எஸ். முஸ்தபா. ரீகல் ஜுவல்லர்ஸ் நிறுவனர் சிவதாசன் தாமரசேரி. நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விபின் சிவதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜேசிடி பிரபாகர் கூறுகையில், "கேரளா, கர்நாடகாவில் நகை விற்பனையில் புகழ் பெற்ற ரீகல் ஜுவல்லர்ஸ், தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னையில் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது.
தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் தங்கத்தில் முதலீடு செய்வதில் ஆர்வமிக்கவர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தரமான நகைகள் நியாயமான விலை யில் கிடைக்க வேண்டும் என் பதுதான். அதைத்தான் ரீகல் ஜுவல்லர்ஸ் கேரளாவில் நிலைநாட்டி இருக்கின்றனர்.
தவெக அரசு அனைத்து வியாபாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பைத் தரும் அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வியாபாரத்துக்கு உகந்த இடமாக தமிழகம் விளங்குகிறது. லஞ் சம், ஊழல், அராஜகம் இல்லாத ஓர் அமைதிப் பூங்காவாக தமிழகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிற முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார்.
ரீகல் ஜுவல்லர்ஸ் நேர்த்தியாக தங்களது கடையை அமைத் திருப்பதுடன், அடுத்த முகூர்த்தத்தில் 25 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருப்பதும் பாராட்டுக் குரியது” என்று தெரிவித்தார்.
ரீகல் ஜுவல்லர்ஸ் சில்லறை விற்பனை விரிவாக்கத் தலை வர் கணேஷ், “நாங்கள் யாருக்கும் போட்டி கிடையாது. தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றம் செய்ய முடியா விட்டாலும் செய் செய்கூலி, சேதாரத்தில் நியாயமான தொகையை வழங்குவோம். இடைத்தரகர்கள் இல்லாததால் குறைந்த விலையில் தங்க நகைகளை வாங்கி வாடிக்கையாளர்கள் பயனடையலாம்.
எங்களிடம் நவீன கால நகைகள் முதல் பாரம்பரியமான நகைகள் வரை பல்வேறு வகையான நகை தொகுப்புகள் கிடைக்கும். புதிய கிளை திறப்பை ஒட்டி அடுத்து வரக்கூடிய முகூர்த்தத்தில் 25 ஜோடிகளுக்கு திரு மணம் செய்து வைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார்.