இ-சம்மிட் 2026-ன் முக்கிய நிகழ்வான ஸ்டார்ட்அப் எக்ஸ்போவை வரும் பிப்ரவரி 7-8 அன்று சென்னை ஐஐடியில் தொழில்முனைவோர் களம் நடத்துகிறது.
தென் இந்தியாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்அப் கண்காட்சியாக, இந்த நிகழ்வு புதுமையான முயற்சிகளை அறிமுகப்படுத்த ஓர் அபூர்வமான வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு கண்காட்சி மட்டுமல்ல, புதிய தொழில்முனைவோரின் புதுமையான எண்ணங்கள், அவர்களுக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவோர்களின் சங்கமம்.
இந்த நிகழ்வில் பல்வேறு ஸ்டார்ட்அப்கள், தங்கள் புதிய கண்டுபிடிப்புகளையும், சமீபத்திய தொழில்நுட்ப சேவைகளையும் மாணவர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளன.
வலையமைப்பு மண்டலங்கள்: தொழில்துறை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் தொடர்புகள் விரிவடையும்.
ஈடு இணையற்ற அனுபவம்: முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களிடையேஉங்கள் புதிய முயற்சிக்கு தனித்துவமான வெளிச்சம் கிடைக்கும்.
முதலீட்டு வாய்ப்புகள்: உங்கள் அடுத்த பெரிய யோசனையை தேடும் தலைவர்கள் மற்றும் ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கு நேரடியாக உங்கள் கருத்துக்கள் சென்றடைய செய்யலாம்.
தயாரிப்பு காட்சிபடுத்துதல்: உங்கள் தயாரிப்பை தலைவர்கள், முதலீட்டாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரின் முன் வெளியிடுங்கள் மற்றும் விளக்குங்கள்.
குழு விவாதம்: முன்னணி முதலீட்டாளர்கள் மற்றும் தொடக்க நிறுவனர்களிடையே வளர்ந்து வரும் தொழில் வாய்ப்புகள் குறித்து சிந்தனையைத் தூண்டும் மற்றும் நுண்ணறிவு பரிமாற்றங்களைக் கவனியுங்கள்.
பேச்சாளர் அமர்வுகள்: தொழில்துறை நிபுணர்களுடன் நேரடி தொடர்பு மூலம் நிஜ உலக வணிக சவால்களைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுங்கள்.
உங்கள் ஸ்டார்ட்அப்பை கண்காட்சி செய்ய வேண்டுமா?
ஸ்டார்ட்அப் எக்ஸ்போவில் விவசாயத்திலிருந்து தொழில்நுட்பம் வரை அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய அங்காடிகள் உள்ளன. உங்கள் ஸ்டார்ட்அப்பிற்கான இடத்தை உறுதிசெய்து, சரியான பார்வையாளர்களிடம் உங்கள் புதுமைகளை கொண்டு செல்லுங்கள!
தேதி: பிப்ரவரி 7-8, 2025
இடம்: ஐஐடி மெட்ராஸ் வளாகம்
பதிவு செய்ய: https://esummitiitm.org/events/startup-expo
புதுமையிலும் தொழில்முனைவுத் திறமையிலும் ஆர்வம் இருந்தால் மட்டும் போதும். இ-சம்மிட் 2026-ல் கலந்துகொண்டு சென்னை ஐஐடியின் நவீன ஸ்டார்ட்அப் சூழலில் அங்கமாகுங்கள்.
பதிவு செய்ய: https://esummitiitm.org/events/startup-expo