`இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்தில் `நம்ம சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025' வீட்டுவசதி கண்காட்சி நேற்று தொடங்கியது. இக்கண்காட்சியை அபி எஸ்டேட்ஸ் நிறுவன மக்கள் தொடர்பு அதிகாரி என்.முரளிதரன் தொடங்கி வைத்தார். உடன் அந்நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் ஆர்.செந்தில் முருகன், காஸாகிராண்ட் விற்பனைப் பிரிவு துணை மேலாளர் ராம்கணேஷ், ஜி ஸ்கொயர் விற்பனை பிரிவு உதவி மேலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர்.

 
வர்த்தக உலகம்

‘இந்து தமிழ் திசை’ நடத்தும் ‘நம்ம சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ 2025’ கண்காட்சி!

சென்னை வர்த்தக மையத்​தில் 3 நாள் வீட்டுவசதி கண்காட்சி - காலை 10 முதல் இரவு 7 மணி வரை இலவச​மாக பார்வையிடலாம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இந்து தமிழ் திசை' நாளிதழும், ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து அபி எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் `நம்ம சென்னை பிராப்பர்ட்டி எக்ஸ்போ-2025' என்ற 3 நாள் வீட்டு வசதி கண்காட்சியை நடத்துகின்றன.

இந்த கண்காட்சியின் தொடக்க விழா நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்ட அரங்க வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அபி எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி என். முரளிதரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அபி எஸ்டேட்ஸ் முதுநிலை விற்பனை மேலாளர் ஆர்.செந்தில்முருகன், காஸாகிராண்ட் விற்பனைப் பிரிவு துணை மேலாளர் ராம் கணேஷ், ஜி ஸ்கொயர் விற்பனைப் பிரிவு உதவி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

டிச. 7-ம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அபி எஸ்டேட்ஸ், பரோடா வங்கி, ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், காஸா கிராண்ட் உட்பட 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஸ்டால்களை அமைத்துள்ளன.

வீட்டுமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், குறைந்த பட்ஜெட் வீடுகள், சொகுசு வில்லாக்கள் ஆகியவற்றுக்கு கண்காட்சியில் முன்பதிவு செய்யலாம். இந்த கண்காட்சியை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

இந்த வீட்டு வசதி கண்காட்சியில் பங்கேற்றுள்ள பரோடா வங்கியின் சென்னை மண்டல வீட்டுவசதி பிரிவு தலைமை மேலாளர் மித்ரா ராம் கூறும் போது, “இக்கண்காட்சியில் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனைக் கட்டணம் கிடையாது. அதோடு பெண் வாடிக்கையாளர்களுக்கு கடனுக்கான வட்டியில் சிறப்பு சலுகை அளிக்கப்படும்.

தற்போது நடைபெறும் கண்காட்சி மூலம் ரூ.100 கோடி அளவுக்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். தேவையான அனைத்து ஆவணங்களுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்காட்சி அரங்கிலேயே கடனுக்கான ஒப்புதல் வழங்கப்படும்' என்றார். ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் (கடன்) ஆர்.ராஜ்குமார் செந்தில்வேலன் கூறும்போது, ``எங்கள் வங்கியில் வீட்டுமனை வாங்க கடன் பெறலாம்.

வீட்டு அடமான கடன் வாங்கலாம். பிறவங்கி, இதர நிதி நிறுவனங்களில் நிலுவையில் உள்ள வீட்டுவசதி கடனை மாற்றி கூடுதல் தொகை பெறலாம். வணிக வளாகம் வாங்கவும், கட்டவும் கடன் வழங்குகிறோம். சுயதொழில் செய்வோர், சம்பளம் பெறுவோர், தொழிலதிபர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் என அனைத்து தரப்பினரும் கடன் பெறலாம்.

வீட்டுக்கடனை பொறுத்தவரை 9.25 சதவீதத்தில் கடன் வழங்குகிறோம். கண்காட்சியில் ஒப்புதல் பெறப்படும் கடனுக்கு ரூ.999 மட்டுமே பரிசீலனைக்

கட்டணமாக வசூலிக்கப்படும். கடன் தொகையை 24 மாதங்கள் முறையாக திருப்பிச் செலுத்தும் வாடிக்கையாளர்கள் டாப்-அப் லோன் பெறலாம்'' என்று குறிப்பிட்டார்.

அபி எஸ்டேட்ஸ் நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் என்.முரளிதரன், முதுநிலை விற்பனை மேலாளர் ஆர்.செந்தில் முருகன் ஆகியோர் கூறும்போது, ``எங்கள் நிறுவனம் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வருகிறது. இதுவரை 142 மனைத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

தற்போது படப்பை, மண்ணிவாக்கம், ஓஎம்ஆர் ஆகிய 3 இடங்களில் புதிய மனைத் திட்டங்கள் தொடங்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கண் காட்சியில் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மனை விலையில் சதுரஅடிக்கு ரூ.125 தள்ளுபடி வழங்கப்படும்.

எங்கள் மனைத் திட்டங்கள் அனைத்தும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககம் (டிடிசிபி) மற்றும் ரியல்எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (ரெரா) அங்கீகாரம் பெற்றவை. எனவே எங்களிடம் மனைகளை வாங்குவோர் வங்கிகளில் எளிதாக கடனுதவி பெறலாம்'' என்றார்.

SCROLL FOR NEXT