வர்த்தக உலகம்

​ராம்ராஜ் காட்​டன் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

ஜூலை 5-ம் தேதி கடைசி நாள்

செய்திப்பிரிவு

சென்னை: ராம்ராஜ் காட்​டன் வழங்​கும் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர்’ விருதுகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வழங்​கப் பெருமை​யுடன் காத்​திருக்​கிறது. மாணவர்​களுக்கு வழக்​க​மான பாடம் கற்​பிப்​ப​தோடு நின்​று​வி​டா​மல், மாறு​பட்ட சிந்​தனையோடும், புதுமை உணர்​வோடும் மாணவர்​களின் திறன்​களை வளர்த்​து, சமூக அக்​கறை ஊட்​டி, நற்​பண்​பு​களைப் போதித்து, பள்​ளியை​யும் மேம்​படுத்​தும் அர்ப்​பணிப்​புமிக்க ஆசிரியர்​களுக்​காகவே இந்த ‘அன்​பாசிரியர்’ விருது வழங்கப்படுகிறது.

இதனை ராஜலட்​சுமி இன்​ஜினீயரிங் கல்​லூரி இணைந்து வழங்​கு​கிறது. பொன்​வண்டு டிடர்​ஜெண்ட் நிறு​வனம் பங்​கு​தா​ர​ராக இணைந்​துள்​ளது. தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரியைச் சேர்ந்த அரசு மற்​றும் அரசு உதவிப் பெறும் பள்​ளி​கள் மற்​றும் மெட்​ரி​குலேசன் பள்​ளி​களில் சிறப்​பாகப் பணி​யாற்​றும் ஆசிரியர்​கள், தொடர்ச்​சி​யாகக் கற்​பித்து வரும் தலைமை ஆசிரியர்​களும் இந்த விருதுக்கு விண்​ணப்​பிக்​கத் தகு​தி​யானவர்​களாவர்.

ஏற்​கெனவே ‘இந்து தமிழ் திசை’ வழங்​கிய ‘அன்​பாசிரியர்’ விருது, மாநில, மத்​திய அரசு வழங்​கும் நல்​லாசிரியர் விருது பெற்​றவர்​கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்​கள் உள்​ளிட்​டோர் தயவு​கூர்ந்து விண்​ணப்​பிக்க வேண்​டாம். இந்த விருதுக்கு இணை​யம் வழி​யாக மட்​டுமே விண்​ணப்​பிக்க வேண்​டும்.

என்ன செய்ய வேண்​டும்?

இத்​துடன் கொடுக்​கப்​பட்​டுள்ள க்யூஆர்​கோடை ஸ்கேன் செய்​து, அதி​லுள்ள விண்​ணப்​பப் படிவத்​தின் மூல​மாக பதிவு செய்​யுங்​கள்.

அதனுடன் சுய விவரக் குறிப்​பு, சாதனை​கள் அடங்​கிய புகைப்​படங்​கள் மற்​றும் வீடியோக்​கள், ஊடக அங்​கீ​காரங்​கள், ஆசிரியரின் நன்​முயற்​சிகளுக்​குப் பிறகு மாணவர்​களின் செயல்​பாடு​களில் ஏற்​பட்ட முன்​னேற்​றம் ஆகிய​வற்​றுக்​கான ஆதா​ரங்​களை​யும் விண்​ணப்​பப் படிவத்​தோடு சேர்த்து அனுப்புங்​கள்.

அன்​பாசிரியர் தேர்வு முறை

விண்​ணப்​பங்​கள் பரிசீலிக்​கப்​பட்ட பிறகு, தேர்வு செய்​யப்​பட்ட ஆசிரியர்​களுக்​கான நேர்​காணல் ஆன்​லைன் வழி​யில் நடை​பெறும். மூத்த கல்​வி​யாளர்​கள், பேராசிரியர்​கள், சமூக சிந்​தனை​யாளர்​கள் அடங்​கிய குழு​வினர் ஆன்​லைன் நேர்​காணலை நடத்​து​வார்​கள்.

தங்​களது சாதனை சான்​றிதழ்​கள், புகைப்​படங்​கள், வீடியோக்​கள், பிற விவரங்​களு​டன் ஆன்​லைன் நேர்​காணலில் ஆசிரியர்​கள் பங்​கேற்க வேண்​டும். தமிழகத்​தி​லுள்ள 38 மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி, காரைக்​கால் 2 மாவட்​டங்​கள் என 40 மாவட்​டங்​களைச் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு அன்பாசிரியர் விருதுகள் வழங்​கப்​பட உள்​ளன.

வரும் 2026 ஜூலை 5-ம் தேதிக்​குள் இத்​துடன் உள்ள க்யூஆர்​கோடை ஸ்கேன் செய்து விண்​ணப்​பிக்க வேண்​டும். கூடு​தல் தகவல்​களுக்கு மு.​முரு​கேசன் - 7401329364 என்ற செல்​பேசி எண்​ணில் அல்​லது murugesan.m@hindutamil.co.in என்​ற மின்​னஞ்​சல்​ வழி​யாக தொடர்​புகொள்​ளலாம்.

SCROLL FOR NEXT