கற்பக விநாயகா எஜுகேஷனல் லோர் ஃபார் லேர்​னிங் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற அஃபினிட்டி‘26 பண்பாட்டு, விளையாட்டு விழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நினைவுப் பரிசு வழங்கும் மருத்துவக் கல்லூரி டீன் சுஃபாலா சுனில் விஸ்வாஸ் ராவ், துணை முதல்வர் துரை பாண்டியன் மற்றும் விழாக் குழுவினர்.

 

படங்கள்: எம்.முத்துகணேஷ்

வர்த்தக உலகம்

மாநில அளவிலான அஃபினிட்டி’26 பண்பாட்டு, விளையாட்டு விழா நிறைவு

கற்பக விநாயகா எஜுகேஷனல் லோர் ஃபார் லேர்​னிங் கல்வி நிறுவனத்தில் 3 நாட்கள் கோலாகலம்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: செங்​கல்​பட்டு மாவட்​டம் மது​ராந்​தகம் அடுத்த சின்​னக்​கொளம்​பாக்​கம் பகு​தி​யில் அமைந்​துள்ள கற்பக விநாயகா எஜுகேஷனல் லோர் ஃபார் லேர்​னிங் - KVELL (நிகர்​நிலைப் பல்​கலைக்​கழ​கம்) நிறு​வனத்​தில், மாநில அளவி​லான ‘அஃபினிட்​டி’26’ பண்​பாட்டு மற்​றும் விளை​யாட்டு விழா 3 நாட்​கள் நடை​பெற்​றது. இதில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்​ன​ராக இணைந்திருந்தது.

இக்​கல்வி நிறு​வனத்​தில் ஆண்​டு​தோறும் நடை​பெறும் இந்த விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி நிறைவடைந்​தது. கற்பக விநாயகா மருத்​து​வக் கல்​லூரி​யின் 4-ம் ஆண்டு மாண​வர்​கள் இந்த விழாவை ஒருங்​கிணைத்து நடத்​தினர். தொடர்ந்து 13 ஆண்​டு​களாக நடத்​தப்​பட்டு வரும் இந்த விழா​வில், தமி​ழ​கம், புதுச்​சேரி​யில் இருந்து 68 மருத்​து​வக் கல்​லூரி​களைச் சேர்ந்த 4,500-க்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் பங்​கேற்​ற​னர்.

முதல் 2 நாட்​களில், மாண​வர்​களின் பன்​முகத் திறமை​களை வெளிக்​கொணரும் வகை​யிலும், மாண​வர்​களிடம் பரஸ்பர நட்​புறவை வளர்க்​கும் வகை​யிலும் பல்​வேறு போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. இதில் இடம்​பெற்ற இசை, நடனம், நாடகம், மேடைப் போட்​டிகள், பொழுது​போக்கு கலை நிகழ்ச்​சிகள் மாண​வர்​களை வெகு​வாக கவர்ந்​தன.

விஜய் நாராயணன், சிவ பிரி​யா, கேபிஒய் குரேஷி, பால்​பச்​சை, ஷர்​மி, கார்த்​திக் தேவ​ராஜ், தன்​வந்த் ஸ்ரீஹரி, ராணவ், நாக​முத்து பாண்​டியன் உள்​ளிட்ட பலரும் நடு​வர்​களாகப் பங்​கேற்று மாண​வர்​களை ஊக்​கப்​படுத்​தினர். கலாட்டா மீடியா சார்​பில் ‘மொத ராத்​திரி’ படக் குழு​வினர் மாண​வர்​களு​டன் இணைந்து படத்​தின் வெற்​றியைக் கொண்​டாடினர்.

அஃபினிட்டி‘26 பண்பாட்டு, விளையாட்டு விழா கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கல்லூரி மாணவிகள்.

3-ம் தேதி நடை​பெற்ற நிறைவு நாள் விழா​வில், திரைப்பட இசையமைப்​பாளர் ஹாரிஸ் ஜெய​ராஜ் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்​றார். அவருக்கு மாண​வர்​கள் உற்​சாக வரவேற்பு அளித்​தனர். நிகழ்ச்​சி​யின் ஒரு பகு​தி​யாக, ஹாரிஸ் ஜெய​ராஜின் பாடலை ஒரு மாணவி பாடி​னார். இதைத் தொடர்ந்​து, கிழக்கு வாசல் சந்​திரன் கிடார் இசை​யுடன் இணைந்து ஹாரிஸ் ஜெய​ராஜ் ஒரு பாடல் பாடியதை மாண​வர்​கள் உற்​சாகத்​துடன் ரசித்​தனர். ஹாரிஸ் ஜெய​ராஜ் தனது கடந்​த​கால இசைப் பயண அனுபவங்​களை மாண​வர்​களு​டன் பகிர்ந்து கொண்​டு, அவர்​களுக்கு பல அறி​வுரைகளை​ வழங்​கி​னார்.

நடனப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கி அவர்களுடன் இணைந்து நடனமாடிய திரைப்பட நடன இயக்குநர் ஸ்ரீதர்.

விழா​வின் ஒரு பகு​தி​யாக, பிரபல நடன இயக்​குநர் ஸ்ரீதர் மற்​றும் சின்​னத்​திரை நடிகை வைஷ்ணவி சுந்​தர் கலந்​து​கொண்டு மாணவ, மாணவி​களு​டன் உற்​சாக​மாக கலந்​துரை​யாடினர். இதே கல்வி நிறு​வனத்​தில் பயின்​று, தற்​போது பிளாக் ஷீப் நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குந​ராக இருக்​கும் விக்​னேஷ் காந்த் மற்​றும் பல்​வேறு இன்​ஸ்​டாகி​ராம் பிரபலங்​களும் பங்​கேற்​று, மாண​வர்​களு​டன் கலகலப்​பாக கலந்​துரை​யாடினர்.

‘அஃபினிட்​டி’26’ பண்​பாட்டு மற்​றும் விளை​யாட்டு விழாவை சிறப்​பாக நடத்த பெரும் ஊக்​க​மும், ஆதர​வும் அளித்த பல்​கலைக்​கழக தலைவர் மற்​றும் டிரஸ்டி டாக்​டர் அண்​ணா​மலை ரெகுப​திக்கு அனை​வ​ரும் பாராட்டு தெரி​வித்​தனர். விழா​வில் பங்​கேற்ற அவர், மாண​வர்​களுக்கு வழங்​கப்பட உள்ள கோப்​பையை நிகழ்ச்சி ஒருங்​கிணைப்​பாளர்​களிடம் ஒப்​படைத்​தார்.

தமிழகம், புதுச்சேரியில் இருந்து விழாவில் பங்கேற்ற மருத்துவ மாணவர்களில் ஒரு பகுதியினர்.

விழா​வில் ஒட்​டுமொத்த சாம்​பியன் கோப்​பையை திருநெல்​வேலி மருத்​து​வக் கல்​லூரி பெற்​றது. வெற்றி பெற்ற மாண​வர்​களுக்கு கோப்​பைகள், பரிசுகளை இசையமைப்​பாளர் ஹாரிஸ் ஜெய​ராஜ், டிரஸ்டி முனை​வர் மீனாட்சி அண்​ணா​மலை, மருத்​து​வக் கல்​லூரி டீன் டாக்​டர் சுஃ​பாலா சுனில் விஸ்​வாஸ் ராவ், துணை முதல்​வர் டாக்​டர் துரை பாண்​டியன் மற்​றும் நிர்​வாகி​கள் வழங்​கினர். ‘அஃபினிட்​டி’26’ அமைப்​பாளர் குழு மாண​வர்​கள் விழாவை ஒருங்​கிணைத்​தனர். மாநில அளவி​லான இந்த விழாவுக்கு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மீடியா பார்ட்​ன​ராக இணைந்​திருந்​தது.

“மருத்​துவப் படிப்பு என்பது கடினமானது என்பதால், இதுபோன்ற பண்பாட்டு மற்றும் விளையாட்டு விழாக்கள் மாணவர்​களுக்கு புத்துணர்ச்சி அளிக்​கின்றன. தொடர் கல்வி மற்றும் தேர்வு​களால் ஏற்படும் மன அழுத்​தத்தைப் போக்கி, மாணவர்களை ஆசுவாசப்​படுத்​துகின்றன. மாணவர்கள் தாங்களாகவே முன்னின்று இந்த விழாவை ஒருங்​கிணைப்​ப​தால், அவர்களிடம் தலைமைப் பண்பு, நேர மேலாண்மை, சிக்கல்​களைத் தீர்க்கும் திறன், குழுவாக இணைந்து பணியாற்றும் திறன் ஆகியவை வளர்கின்றன.

பிற கல்லூரி மாணவர்​களுடன் பழகுவதன் மூலம் எதிர்கால மருத்​துவப் பணிக்குத் தேவையான சமூக வலைப்​பின்னல் மற்றும் பரஸ்பர நட்புறவு வலுப்​பெறுகிறது. வகுப்​பறை​களுக்கு அப்பாற்​பட்டு மாணவர்​களிடம் மறைந்​திருக்கும் கலை, இசை, விளையாட்டுத் திறமைகளை வெளிப்​படுத்​த​வும், அவர்களது ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சியை மேம்படுத்​தவும் இதுபோன்ற விழாக்கள் முக்கிய பங்காற்​றுகின்றன” என்று நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT