பலன்கள்: இந்த வாரம் உடனிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் வேறொருவர் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது குடும்ப நிம்மதிக்கு வழிவகுக்கும். சிலரது பேச்சுகள் விதாண்டவாதமாக இருக்கும். விட்டுக் கொடுத்து செல்வதால் பிரச்சினைகளை முற்றிலுமாக தவிர்க்கலாம்.
தொழில் வியாபாரம் செய்வோர் ஏற்றத்துடன் தொழிலை நடத்துவீர்கள். முயற்சிகள் பங்குதாரர்கள் உதவியுடன் சிறப்பாக நடைபெறும். சிக்கன நடவடிக்கைகளை கையாளுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் கனவு நனவாகும். மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
பெண்கள் வேலைக்குச் செல்லும் போது மிக கவனமுடன் சென்று வரவும். கலைத்துறையினருக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு பிறர் பழிக்கு நீங்கள் ஆளாக நேரலாம். மாணவர்கள் சக மாணவர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.
அஸ்வினி: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பணம் சேரும். மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள். எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
பரணி: இந்த வாரம் ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சுக்கிரன் சஞ்சாரம் ராசிக்கு 10-ல் இருப்பதால் விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன் காண்பார்கள். புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
பரிகாரம்: தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்லி வந்தால புது உற்சாகம் பிறக்கும்.
பலன்கள்: இந்த வாரம் வெளியூர் பயணங்களும் அதன் மூலம் லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப செலவுகளில் வீண் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. குடும்ப பொறுப்புகளின் காரணமாக கடின உழைப்பு ஏற்படக் கூடும். அதனால் உடற்சோர்வும், அசதியும் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
தொழிலில் இருந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகும். வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். சிக்கல்கள் பிறரால் ஏற்பட்டாலும் அதை எளிதில் சமாளித்து விடும் தைரியம் உண்டாகும். பெண்களுக்கு உயர்வான வாரம் என்றே சொல்ல வேண்டும்.
கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவ மணிகள் விளையாட்டுகள், போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களைப் பெறுவீர்கள்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
ரோகிணி: இந்த வாரம் வழக்கு சம்பந்தமான முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். தடை தாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
பரிகாரம்: மஹா லட்சுமி ஸ்தோத்திரம் சொல்லி வர மனம் ஒரு நிலைப்படும்.
பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வர். குடும்பத்தில் மூதாதையர் சொத்துகளால் ஏற்பட்ட பிரிவினை முடிவுக்கு வரும். குடும்ப உறுப்பினர்கள் விட்டுக் கொடுத்து போவதால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முனைவோருக்கான தருணம் வந்துவிட்டது. கடல் கடந்து செல்ல வேண்டி வரலாம். வேலைப் பளுவால் உடல் அசதி ஏற்படும். நேரத்திற்கு உணவருந்த முடியாமல் போகலாம்.
பெண்கள் ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கலைத்துறையினருக்கு எந்த வேலையிலும் முழு கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் நண்பர்களுடன் செல்லும் போது கவனமாக இருக்கவும். பெற்றோர் துணையாக இருப்பார்கள்.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது.
திருவாதிரை: இந்த வாரம் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பரிகாரம்: விஷ்ணு மந்திரங்களை ஜபித்து வர வாழ்வில் வளம் உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் உங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிகள் பிறக்கும். குடும்பத்தாருக்கு தேவையான உதவிகளை நீங்கள் முன்னின்று செய்து முடிப்பீர்கள். குடும்பத்தின் நிதி நிலைமை சரியாக இருப்பதால் தேவையான அனைத்து வசதிகளும் தானாகவே வந்து சேரும்.
வரன் தேடும் முயற்சிகளில் ஈடுபடுவீர்களேயானால் அதில் வெற்றி நிச்சயம். தொழில் பங்குதாரர்களிடமிருந்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு அனுகூலம் உண்டாகலாம். மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியில் சிக்கி தவிப்பீர்கள்.
பெண்மணிகள் குடும்ப நிர்வாகத்தை கவனிப்பதில் சிக்கல்கள் இருந்தாலும் அதை திறம்படச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும். மாணவ மணிகளுக்கு சந்தோஷமான வாரம். நண்பர்களுடன் இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள்.
புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படலாம். வீண் பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும். சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
பூசம்: இந்த வாரம் சுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது.
ஆயில்யம்: இந்த வாரம் கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும். குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து வர வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
பலன்கள்: இந்த வாரம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். குடும்பத்தில் தூரத்திலிருந்து வரும் செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாளைய உறவு ஒன்று இல்லம் தேடி வரும். வீடு, நிலம் போன்றவைகளில் பணத்தை முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். மொத்தத்தில் பிரச்சினையில்லா வாரம்.
தொழிலில் இருந்த இடையூறுகளைக் களைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அதில் உங்கள் மேல் பொறாமையும், விரோதமும் ஏற்பட வாய்ப்புண்டு. பழைய கடன்கள் வசூலாகும். அதனால் உங்களுக்கு மனநிம்மதி உண்டாகும்.
பெண்மணிகளுக்கு வரவுக்கு ஏற்ற செலவு செய்வது நன்மையைத் தரும். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவமணிகள் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகம்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். கடன் விஷயங்களில் கவனம் தேவை. மிகவும் கவனமாக பொருளாதார பிரச்சனைகளை கையாழுவது அவசியம். அக்கம் பக்கத்தினரிடம் நிதானமாக பழகுவது நல்லது.
பூரம்: இந்த வாரம் வீண் அலைச்சல், காரிய தடை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம். ஜீரணம் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். உடல்சோர்வு உண்டாகும். பணம் பலவழிகளிலும் செலவாகும்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் கவலை ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.
பரிகாரம்: சிவபெருமான் முன் அமர்ந்து வணங்க மனம் ஒருநிலைப்படும்.
பலன்கள்: இந்த வாரம் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் கருத்து வேறுபாடு வரலாம். குடும்பத்தில் தெய்வீக காரியங்கள் அதிகரிக்கும். அதற்கான செலவுகளும் இருக்கும். பிள்ளைகள் உங்களுடன் சேர்ந்து சில நற்காரியங்களைச் செய்வார்கள்.
திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடிவரும். வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். உடன் பணிபுரிபவர்களுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள். பெண்கள் உணர்வுப்பூர்வமான முடிவுகளை தள்ளிப்போடுவது நல்லது.
கலைத்துறையினருக்கு சுணங்கிக் கிடந்த காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். அரசியல்துறையினருக்கு நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கவனத்தை செலுத்துவது நல்லது. பொழுது போக்கு, வேடிக்கை நிகழ்ச்சிகளில் கவனத்தை சிதற விடாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள் வீணாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை.
அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.
சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் உள்ள மந்த நிலை மாற கூடுதல் சிரத்தையுடன் காரியங்களை கவனிப்பது அவசியம். வாழ்க்கை தரம் உயரும்.
பரிகாரம்: துளசி மாடத்திற்கு விளக்கேற்றி வர செல்வம் சேரும்.
பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களைப் பற்றி புரிந்து கொள்ள பல சூழ்நிலைகள் உருவாகும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஒருவருக்கொருவர் புரிந்து நடந்து கொள்வர். மாமியார் - மருமகள் உறவு கற்கண்டாய் தித்திக்கும். அதனால் இல்லத்தில் மகிழ்ச்சியே. தொழில்-வியாபாரம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும்.
வரவேண்டிய பணம் உங்களைத் தேடி வரும். கவலை வேண்டாம். தேக்கி வைத்துள்ள பொருட்களை விற்பனை செய்ய முற்படுவது நல்லது. நல்ல வாடிக்கையாளர்கள் கிடைக்கும் சமயமாக இது இருக்கிறது. உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் இருந்து வந்த பனிச்சுமை குறையும். சக பணியாளர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடு குறையும்.
வேலை விஷயமாக வெளியூர் வெளி மாநிலங்களுக்கு சென்று வர வேண்டி வரும். பெண்கள் சுயமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். பெரியோர் பேச்சு கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். மாணவர்கள் பெற்றோர்களிடம் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கல்வி அல்லாது பிற துறைகளிலும் சாதிப்பீர்கள்.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்.
சுவாதி: இந்த வாரம் மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட மனதில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும்.
பலன்கள்: இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிக ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கிடையே சுமூகமான உறவு இருக்கும். சிறுவர்களால் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கலாம். அவற்றை பதட்டம் இல்லாமல் சரி செய்ய முயலுங்கள். குடும்பத்துடன் ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். தொழில் - வியாபாரம் திருப்திகரமாக இருக்கும்.
புதிய முயற்சிகலில் இறங்குவதற்கு கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகள் எளிதில் கிடைக்கும். சிறு வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். எனினும் சளைக்காமல் கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்.
சக பணியாளர்கள் உதவுவார்கள். பெண்களுக்கு வெளியூர் செல்ல வேண்டி வரலாம். நீண்ட நாட்களாக தேடிய பொருள் ஒன்று கிடைக்கும். விஷேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்ப்பது நல்லது. கல்வியில் உங்கள் கவனத்தை திருப்புவதன் மூலம் உங்கள் மதிப்பு உயரும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணவரத்து திருப்திதரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். கிளைகளை விரிவுபடுத்த முழு கவனம் செலுத்துவீர்கள். மன அமைதி கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும்.
கேட்டை: இந்த வாரம் எதை பற்றியாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனநிலை இருக்கும். உங்கள் மீது மற்றவர்கள் கோபப்படமுடியாத அளவு நடந்து கொள்வீர்கள். மனக்கவலை குறையும். சந்திரன் சஞ்சாரத்தால் பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பரிகாரம்: சுப்பிரமணியருக்கு அரளி மாலை போட்டு வழிபடுங்கள் நல்லவை நடக்கும்.
பலன்கள்: இந்த வாரம் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு வேலை செய்வீர்கள். ரகசியங்களை காப்பாற்றுவீர்கள். குடும்பம் சுமூகமான சூழ்நிலையில் இருக்கும். வீடு தேடி வந்து உங்களுக்கு நல்வாக்கு சொல்வார்கள். வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் சிலருக்கு வரலாம். மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
தொழிலில் சக பங்குதாரர்களால் இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். உங்கள் பேச்சுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து தொழிலை விரிவுபடுத்துவது பற்றி பேச்சை தொடங்குவார்கள் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். நிலுவையில் இருந்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
சில வாய்ப்புகள் உங்களுக்கு தட்டிப்போனதற்கு காரணமாக இருந்தவர்கள் இப்போது உங்களுக்கு நன்மை செய்வார்கள். பெண்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம். குடும்ப நிர்வாகம் செய்வதில் பிரச்சினை வராது. மாணவர்களுக்கு பொறுமையும் நிதானமும் தேவை. ஆசிரியரின் கவனம் உங்கள் மேல் இருக்கும்.
மூலம்: இந்த வாரம் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண் பழி நீங்கும். சில்லறை சண்டைகள் சரியாகும். தொழில் வியாபாரம் சற்று மந்தமாக காணப்பட்டாலும் பணம் வருவது தடைபடாது. பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.
பூராடம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல் நீங்கும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றி சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். வீடு, மனை பற்றிய கவலை குறையும். குடும்ப பிரச்சனை தீரும். கடன் கட்டுக்குள் இருக்கும்.
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று வந்தால் தொழிலில் முன்னேற்றம் இருக்கும்.
பலன்கள்: இந்த வாரம் வெளியூர் பயணங்கள் உங்களின் வெற்றிக்கு வழிகாட்டுதலாக இருக்கும். குடும்பத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. தொலைபேசி மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாகவோ ஒரு நற்செய்தியை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனநிம்மதி இல்லாமல் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மொத்ததில் நன்மையும், தீமையும் கலந்தே இருக்கும்.
தொழிலில் தடைப்பட்டிருந்த நிறுவனங்களிலிருந்து வர வேண்டிய வாய்ப்புகள் சிறந்த முறையில் வந்து சேரும். வருமானமும் அதிகரித்து காணப்படும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதால் புதிய முயற்சிகளை இவ்வாரம் தாராளமாக செய்யலாம். உத்தியோகத்தில் சந்தோஷமான வாரமிது. உங்களை தேடி புதிய வாய்ப்புகள் துரிதமாக வரும்.
வெளி நாடுகளில் வேலை புரிவோர் தாயகத்திற்கு திரும்புவதற்கு முயற்சி செய்தால் இப்போது அது உங்களுக்கு பலிதமாகும். அதில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. பெண்மணிகள் கவனமாக இருக்க வேண்டிய வாரம் இது. மாமியார் மருமகள் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். மாணவ மணிகள் சிறந்த மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான முயற்சியை இப்போது மேற்கொள்ளலாம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பயணம் செல்ல நேரிடலாம். சந்திரன் சஞ்சாரம் நன்மை தரும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். சுக்கிரன் வாழ்க்கை துணை மூலம் லாபம் கிடைக்க செய்வார். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள்.
திருவோணம்: இந்த வாரம் உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டுவிடுவார்கள். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன்வசதி கிடைப்பதில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதியும், சுகமும் உண்டாகும். மனவருத்ததில் விட்டு சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கணவன், மனைவிக்கிடையில் சுமுகமான உறவு இருக்கும். பிள்ளைகள், கல்வியில் மேன்மை அடைய தீவிரமாக செயல்படுவீர்கள்.
பரிகாரம்: வராகி அம்மனுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
பலன்கள்: இந்த வாரம் கல்வித் துறையில் சிறந்து விளங்குவீர்கள். சிலர் பெரிய சாதனைகளும் செய்வீர்கள். குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கும்படியான சூழ்நிலை அமையும். ராசியில் சனி இருந்தாலும் பெரிய தீமைகள் ஒன்றும் நடப்பதற்கு வாய்ப்பில்லை. கணவன் மனைவிக்கிடையே நல்ல ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்த மனக்கவலை தீரும். வீடு, வாகனம் போன்றவைகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.
தொழில்- வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறைந்து உங்கள் விற்பனை அமோகமாக இருக்கும். வாடிக்கையாளர்கள் விரும்பி உங்கள் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். பண விஷயங்களை நீங்கள் உங்கள் நேரடி பார்வையில் வைத்துக் கொள்வது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்று வர நேரலாம். உடன் பணிபுரிபவர்களால் சற்று தொல்லைகள் வரலாம்.
அதனால் அந்த வேலையை நீங்கள் இழுத்து போட்டுக் கொண்டு செய்வீர்கள். பெண்கள் அண்டை அயலாருடன் பழகும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளால் ஒய்வில்லாமல் உழைக்க வேண்டி வரலாம். மாணவர்களுக்கு மேற்கல்வி பயில வேண்டுமென்ற விருப்பமிருப்பின் அதற்கான முயற்சிகளை இப்போது செய்யலாம். கடின உழைப்பின் மூலமாக நல்ல மதிப் பெண்களை பெற முடியும்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மறைமுகமாக உங்களை குறை சொல்லியவர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனங்களை பயன்படுத்தும் போது கவனம் தேவை.
சதயம்: இந்த வாரம் பணப் பிரச்சனை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். நீங்கள் முயற்சியில் வெற்றியை குறிக்கோளாக கொள்வீர்கள். விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் மூலம் எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கோபத்தை குறைத்து வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும்.
பரிகாரம்: முருகனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட குடும்ப பிரச்சனைகள் அகலும்.
பலன்கள்: இந்த வாரம் மனதிற்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு பின்பு சரியாகும். உங்களிடம் கடன் வாங்கியிருந்தவர்கள் சரியான நேரத்தில் திருப்பி தராததால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். தொழில் ரீதியான பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
பங்குதாரர்களிடமிருந்து மனக் கசப்பு நீங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்துவீர்கள். தேவையான பண உதவிகள் கிடைப்பதால் செழிப்பாக தொழில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் புகழ்ச்சிக்கு இடம் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்கள் நீங்கள் செய்யும் ஒவ்வொரு விசயத்திலும் எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் அதனால் கவனமுடன் பணியாற்றுங்கள்.
செல்வாக்கு உயரும். பெண்கள் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால் மேலதிகாரிகளின் நற்பெயரைப் பெறுவீர்கள். முயற்சிகளை தொடர்ந்து செய்து வாருங்கள். மாணவ மணிகள் அதிக மதிப்பெண் பெறுவதற்கு இரவு பகல் பாராமல் படித்து வருவீர்கள். அதற்கேற்ப பலனும் கிடைக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுபிடிப்பது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பது பற்றிய மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். செயல் திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். ராசியாதிபதி சூரியன் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.
ரேவதி: இந்த வாரம் உடல்நல பாதிப்பு உண்டாகலாம். உஷ்ண சம்பந்தமான நோய் வரலாம் பண பற்றாக்குறை ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதலான லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் கவனமாக நடந்து கொள்வது நன்மை தரும்.
பரிகாரம்: சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபட மனம் ஒருநிலைப்படும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.