வார ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கு இந்த வார பலன்கள் @ ஆக.20 - 26

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:

பலன்கள்: இந்த வாரம் எதைப்பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.

உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும்.

பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது. உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம். எந்த காரியத்திலும் அவசரம் காட்ட தோன்றும். நிதானமாக செய்தால் வெற்றி நிச்சயம். அரசியல் துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.

அஸ்வினி: இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும்.

பரணி: இந்த வாரம் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவுதிறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக வெளியூர் அடிக்கடி செல்ல வேண்டி வரலாம்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர் சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.

ரிஷபம்:

பலன்கள்: இந்த வாரம் மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்களிடம் பேசும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும்.

மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும்.

மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யபோய் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரலாம். கவனம் தேவை. எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல் துறையினருக்கு சிறிய வேலையும் செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.

ரோகிணி: இந்த வாரம் மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். மனை தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம் கவனம் தேவை.

பரிகாரம்: சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.

மிதுனம்:

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.

முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் அடையும். சொல் வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். விட்டுக் கொடுத்து நடப்பது நன்மை அளிக்கும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள்.

உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனவேதனைகள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும்.

திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக இருப்பதும் அன்பாக பேசுவதும் நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.

கடகம்:

பலன்கள்: இந்த வாரம் செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும். வீடு, மனை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். தடைபட்டிருந்த வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த அதிகாரமிக்க பதவிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். கடன் பிரச்சனையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்குவன்மையால் நன்மை உண்டாகும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

பூசம்: இந்த வாரம் மறைமுக எதிர்ப்புகள் குறையும். எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதேவேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். மனதில் உற்சாகம் உண்டாகும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

ஆயில்யம்: இந்த வாரம் பொருளாதார உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். அரசாங்க ரீதியிலான காரியங்கள் மிகச்சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட மனகுழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.

சிம்மம்:

பலன்கள்: இந்த வாரம் காரியங்களில் தடைதாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம். தொழில் வியாபாரம் நிறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். ஆனாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

மேலதிகாரிகள், சக ஊழியர்கள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பிரயாணங்கள் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மை தரும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். உறவினர்கள் நண்பர்கள் வகையில் அனுகூலம் ஏற்படும். பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.

அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.

மகம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்கள் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

பூரம்: இந்த வாரம் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த தகராறுகள் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. மனோதிடம் உண்டாகும். கடன்கள், நோய்கள் தீரும். விவாதம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

பரிகாரம்: தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி:

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார்போல் இருக்கும். மற்றவர்களது உதவி கிடைக்கும். சாதூரியமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத் திறன் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு சந்தை லாபம் ஓரளவு கூடும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும். உங்களின் ஆலோசனைகள் மேலிடத்தால் அங்கீகரிக்கப்படும்.

குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பெண்களுக்கு சாதூரியமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சக மாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எல்லா முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் ஏற்படும். சுபச் செலவுகள் இருக்கும். பணவரத்து திருப்தி தரும். உங்களது செயல்களுக்கு யாராவது ஒருவர் உறுதுணையாக இருப்பார்கள். பேச்சு திறமை கை கொடுக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பணவரத்து தாமதப்பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள். செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை குறைப்பது நன்மை தரும்.

பரிகாரம்: துளிசியை பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

துலாம்:

பலன்கள்: இந்த வாரம் விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். தொழில் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும்.

சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. மேலதிகாரிகள் மூலமாக இருந்து வந்த அழுத்தம் அகலும். குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும். பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும். அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம்.

அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நக்ஷத்ர நாதன் செவ்வாய் உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.

சுவாதி: இந்த வாரம் வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். இன்று கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.

விருச்சிகம்:

பலன்கள்: இந்த வாரம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

சக ஊழியர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும்.

பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். தாயார் வழி உறவினர்களின் மூலம் நன்மைகள் நடக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் அகலும்.

அனுஷம்: இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

கேட்டை: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.

தனுசு:

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்காமல் இருப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது வேகமெடுக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மேலிடத்திலிருந்து ஒரு இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள். பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும்.

சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.

மூலம்: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.

பூராடம்: இந்த வாரம் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் உங்களுடைய பக்குவமான அணுகுமுறையினால் எதிலும் சாதகமான பலனை பெறுவீர்கள். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: சித்தர்களை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.

மகரம்:

பலன்கள்: இந்த வாரம் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.

சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை. உறவினர்கள்- நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள்.

கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

திருவோணம்: இந்த வாரம் தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை அதிகரிக்கும்.

பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

கும்பம்:

பலன்கள்: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் தேவை. செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். மேலிடத்தினால் கொடுக்கப்பட்ட வேலைகளை சரி வர செய்து பாராட்டினைப் பெறுவீர்கள்.

பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். வீண் வாக்குவாதங்களை அகலும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் அனைவரிடத்திலும் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும்.

செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொது நலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கவுரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே முடித்து விடுவது வெற்றிக்கு வழிவகுக்கும்.

சதயம்: இந்த வாரம் சுகம் உண்டாகும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனை களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மீனம்:

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வேகம் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். வீடு, மனை சம்பந்தமான இனங்களில் அனைத்து விதமான முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள்.

அதே சமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும்.உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன் முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது.

ரேவதி: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொத்து தொடர்பான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. கூடுதல் கவனத்துடன் எதையும் அணுகுவது வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT