வார ராசிபலன்கள்

துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ மார்ச் 12- 18

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
துலாம்:
(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), ராகு, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு (வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவபூர்வமான அறிவுத் திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பண வரத்து தாமதப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.

பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக்கு இடையில் மனம் விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வீண் கவலை நீங்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மன மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்:
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), ராகு, செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு (வ) - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் காரிய தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும்.

பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பண வரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். விடுமுறையில் மகிழ்ச்சியான பொழுது போக்கில் ஈடுபடுவீர்கள்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும், புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும்.

அனுஷம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். வீண் செலவு குறையும். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

கேட்டை: இந்த வாரம் திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), ராகு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சுக்கிரன், சனி - களத்திர ஸ்தானத்தில் குரு (வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பல வகைகளிலும் நன்மை உண்டாகும். இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பண வரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை.

அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனு சரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.

மூலம்: இந்த வாரம் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரலாம். வர வேண்டிய நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். தந்தை மூலம் நன்மை உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவினை எடுப்பீர்கள். மனதில் இருந்த வீண் கவலைகள் நீங்கும்.

பூராடம்: இந்த வாரம் அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த முட்டுக் கட்டைகள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்யும் படியிருக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மன குழப்பங்கள் தீரும். எதிலும் தெளிவான சிந்தனை இருக்கும். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT