வார ராசிபலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம்: வார பலன்கள் @ ஜூலை 2 - 8

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தன வாக்கு ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பண வரத்து மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பெண்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டு கட்டைகள் அகலும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

அஸ்வினி: இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையில் இணக்கமான போக்கு காண்பது சிரமம். வீண் கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரணி: இந்த வாரம் பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப் பளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் அறிவு திறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல் நலத்தில் கவனம் தேவை. பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பண வரத்து திருப்தி தரும்.

பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ண பகவனை பிராத்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தடங்கல்கள் அகலும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். சாதாரணமாக செயல்பட்டாலும் அது மிகப் பெரிய வெற்றி பெறும். வாகனப் பிராப்தி ஏற்படும். பண வரத்து கூடும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.

வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெருமைகள் உண்டாகும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் உங்களை அனுசரித்து செல்வார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மன உறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவம் சார்ந்த செலவுகள் நேரலாம். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும் போதும் எச்சரிக்கை அவசியம். அடுத்தவர்களுக்கு உதவ போய் வீண் பழி ஏற்படலாம் கவனம் தேவை. உங்களை சார்ந்தவர்களே உங்களை தவறாக நினைக்கலாம்.

ரோகிணி: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை தரும். வியாபார ஸ்தலத்திற்காக புதியதாக இடம் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிக்கும்போது கவனமாக பேசுவது நல்லது. பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நிம்மதி குறையலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது வார்த்தைகளை கோர்த்து பேசுவது முக்கியம்.

பரிகாரம்: ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சூரியன், புதன்(வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் திட்டங்கள் வெற்றி பெறும். பயணங்கள் குறிக்கோள் உள்ளவைகளாக மாறும். அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை அகலும். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண் கவலைகள் நீங்கும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச் செலவுகள் ஏற்படும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்திற்கு ஆளாக நேரிடும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களுக்கு உதவப் போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. பெயர், புகழ், கவுரவம் யாவும் தேடி வரும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். இதுவரை நிலுவையிலிருந்த பணத் தொகைகளும் கைக்கு கிடைக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்வு யாவும் சிறப்பாக அமையும்.

திருவாதிரை: இந்த வாரம் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT