பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அஸ்வினி: இந்த வாரம் பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். கட்சிகளில் உட்பூசல்கள் ஏற்பட்டாலும் உங்களின் வார்த்தைகளுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எதிலும் சற்றுச் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
பரணி: இந்த வாரம் போட்டி பொறாமைகளை எதிர்கொண்டாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டிவரும். வயல் வேலைகளுக்குத் தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கமாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்துச் செல்லவும். புதிய வாய்ப்புகள் சற்று தாமதமாகக் கிடைத்தாலும் நல்ல வாய்ப்புகளாக அமையும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர காரிய வெற்றி உண்டாகும். கவலை தீரும்.
பலன்கள்: இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும்.
பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பண வரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொருளாதார பாதிப்புக்கு ஆளாவீர்கள். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் உற்சாகத்தை ஏற்படுத்தினாலும் உடல்நலக் குறைவுகளையும் உண்டாக்கும். நண்பர்களால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. விளையாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றாலும் ஓரளவுக்கு முன்னேற்றங்களை அடைய முடியும். அரசு வழியில் ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி: இந்த வாரம் பொருளாதார நிலை ஓரளவுக்கு திருப்திகரமாக அமையும். முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கணவன்-மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாது. நெருங்கியவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள் என்ற நினைப்பைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளுக்குப் பின் குணமடையும்.
பரிகாரம்: கனக தாரா ஸ்தோத்திரம் சொல்லி மகா லட்சுமியை வழிபட பண கஷ்டம் தீரும். இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் பேச்சின் இனிமை சாதுரியம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.
பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பண வரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்தநிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் செய்பவர்களும் நிறைய போட்டிகளை சந்திக்கநேரிடும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் இடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வது நல்லது.
திருவாதிரை: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்பட்டாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலப்பலனை அடைய முடியும். மாணவர்கள் கல்வியில் சற்றே கவனமுடன் நடந்து கொள்வது நல்லது. சனிக்குரிய பரிகாரங்களைச் செய்வது உத்தமம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உங்களின் உடல் ஆரோக்கியம் அவ்வளவு திருப்திகரமாக இருக்கும் எனக் கூற முடியாது. குடும்பத்திலும் வரவுக்கு மீறிய செலவுகளால் பொருளாதாரத் தட்டுப்பாடுகள் ஏற்படும். சுப காரிய முயற்சிகளுக்கு உற்றார்- உறவினர்களே தடையாக இருப்பார்கள்.
பரிகாரம்: மதுராந்தகம் ஏரிகாத்த ராமரை வணங்க குடும்பத்தில் குழப்பம் நீங்கி நண்மை உண்டாகும். ஆரோக்கியம் உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.