பலன்கள்: இந்த வாரம் மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும்.
பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பணத்தேவை பூர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள்.
திருவோணம்: இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுக்கிரன் தனது சஞ்சாரத்தால் வீண் செலவை உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் எந்த விஷயங்களிலும் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவ பூர்வமான அறிவுத் திறன் கை கொடுக்கும். பண வரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். செவ்வாய் சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் மங்கள் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்கள் உங்களின் பிரச்சனைகளுக்கு வலிய வந்து உதவிகள் செய்வார்கள். விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும்.
புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவதில் இருந்த தாமதம் நீங்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.
கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் இருக்கும் திட்டங்களை சரியாக செயல்படுத்துவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் லாப ஸ்தானத்தை சூரியன் பார்க்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பண வரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
சதயம்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பண வரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
பலன்கள்: இந்த வாரம் பண வரவு அதிகமாகும். வீண் செலவு குறையும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.
தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலை தூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். நன்மைகள் கிடைக்கும். காரிய தடை தாமதம் நீங்கும். வழக்கு விவகாரங்கள் கட்டுப் பாட்டிற்குள் இருக்கும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதாரம் உயரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தாமதமான காரியங்கள் வேகம் பிடிக்கும். வீண் கவலை விலகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னருடன் அனுசரித்து செல்வது நல்லது. வியாபார போட்டிகள் குறையும். எல்லா துறைகளிலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும்.
ரேவதி: இந்த வாரம் குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வாய்க்கு ருசியான உணவு உண்பீர்கள். கணவன் மனைவி ஒருவரது பேச்சை மற்றவர் கேட்பதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மையைத் தரும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். தடைகள் விலகும். பண வரத்து திருப்தி தரும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மன குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.