பலன்கள்: இந்த வாரம் புதனின் சஞ்சாரம் பண வரத்தைத் தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டதூர பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் தடங்கல்கள் அகலும் . புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணி புரிவார்கள்.
சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பிள்ளைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு உங்களது பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது.
அரசியல் துறையினர் வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவது நன்மை தரும். கலைத் துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்கள் முதல்தர மாணவனாக தேர்ச்சி பெறுவார்கள். படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்களின் உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக சரியாகிவிடும். தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய சூழ்நிலைகளால் உடல் நிலை சோர்வடையும் என்றாலும் அதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனையும் அடைய முடியும்.
திருவோணம்: இந்த வாரம் பிள்ளைகளால் சிறிதளவு மருத்துவச் செலவுகளை எதிர் கொள்வீர்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலமான பலனை அடைவீர்கள்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் திருமண சுப காரிய முயற்சிகளை மேற்கொள்வதை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றினாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டால் சேமிக்க முடியும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர அனுகூலம் உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்டதூர பயணங்கள் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக அலைய நேரிடும்.
கலைத் துறையினருக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். புதிய எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற முழு மூச்சாக பாடுபடுவீர்கள். புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவுக்கு சிறப்பான லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.
சதயம்: இந்த வாரம் வம்பு வழக்குகளில் இழுபறியான நிலையே நீடிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கடினமாக உழைத்தால் மட்டுமே எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியும். உற்பத்தியிலும் விற்பனையிலும் அதிக முயற்சிகளை மேற்கொண்டால் எந்த போட்டி பொறாமைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டாகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வெளியூர், வெளி நாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பும், கூட்டாளிகளின் ஆதரவும் மன மகிழ்ச்சியை உண்டாக்கிவிடும். வாங்கிய வங்கிக் கடன்களையும் அடைத்துவிடுவீர்கள்.
பரிகாரம்: பைரவரை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். கலைத்துறையினர் மனதில் எதை பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற கூடுதலாக படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் உத்தியோகஸ்தர்களுக்கு ஓரளவுக்கு முன்னேற்றமான பலன்கள் உண்டாகும் என்றாலும் வேலைப் பளுவும், பொறுப்புகளும் அதிகரிக்கும். எந்தப் பணி முடிப்பதற்கும் கடின உழைப்புக்களை மேற்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு ஓரளவுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
உத்திரட்டாதி: இந்த வாரம் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை அமைவதில் தடைகள் உண்டாகும். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதல்கள் உண்டாகாது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களால் மன சஞ்சலம் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது.
ரேவதி: இந்த வாரம் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வதால் ஓரளவுக்கு அனுகூலப் பலனைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக அமையும் என்றாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. சுப காரிய முயற்சிகள் அனைத்திலும் தடைகளே நிலவும்.
பரிகாரம்: தினமும் அம்மனை வணங்கினால் கஷ்டம் நீங்கும்.
இந்த வார கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.