வார ராசிபலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ மே 14 - 20

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ராசியை செவ்வாய் பார்ப்பதால் எதிர்ப்புகள் அகலும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். உங்களின் பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கை வளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். உடன் வேலை செய்வோரின் ஆதரவால் அதனைச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். வீட்டில் சின்ன சின்ன வாக்கு வாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன் பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு.

உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உடற்சோர்வு உண்டாகலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் வரும் வருமானம் தாமதப்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான நிலை இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பண வரத்து அதிகரிக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

பூசம்: இந்த வாரம் அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

ஆயில்யம்: இந்த வாரம் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கடும் முயற்சிகள் பலன் தரும். செலவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு அம்மன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தொழில் ஸ்தானம் மிக பலமாக இருக்கிறது. தொழில் நிமித்தமாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சக வாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண் மனக் கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும்.

மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொது நல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். அலைச்சல் இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகம்: இந்த வாரம் வீண் மனக் கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பண வரவு இருக்கும். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.

பூரம்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன் யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் தேவை. பழைய பாக்கிகள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். விருந்தினர்கள் வருகையால் செலவு கூடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களல் செல்லும் போதும், நெடுந்தூர பயணங்களின் போதும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: ஞாயிற்றுக் கிழமை அன்று அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் திரிகோணம் மிக நன்றாக உள்ளது. பிள்ளைகளால் அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். காரியத் தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் வாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும் என்றாலும் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும்.

எனவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நனமை ஏற்படும். சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும்.

கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்கு வாதம் ஏற்படலாம். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் அனுகூலம் உண்டாகும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது. பணம் சார்ந்த கஷ்டங்கள் குறையும். காரிய வெற்றியும், நன்மையும் உண்டாகும்.

அஸ்தம்: இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். எந்த பிரச்சனையும் எதிர்கொள்ளும் தைரியம் உண்டாகும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் மனதை கவலை கொள்ளச் செய்த பிரச்சனைகளில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் கிடைக்க பெறலாம். தொழில், வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும். எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறும். வேலை தேடி கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோக வாய்ப்புகள் வரும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

பரிகாரம்: புதன் கிழமை அன்று அருகில் இருக்கும் ஐயப்பன் கோவிலுக்குச் சென்று வணங்கி வரவும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT