வார ராசிபலன்கள்

கடகம், சிம்மம், கன்னி: வார பலன்கள் @ ஏப்.23 - 29

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கடகம்:
(புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சந்திரன், சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. தைரியம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும். பண வரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. நீண்ட நாட்களாக தொழிலில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மை தரும்.

மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் நிதானமாக பேசுவது குடும்ப அமைதியை தரும். நண்பர்கள், உறவினர்கள் விலகி செல்வது போல் இருக்கும்.

குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். பெண்களுக்கு மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு பேச்சுத் திறமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசித்து செய்வது நன்மை தரும். கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கணவன் - மனைவிக்கு இடையே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

பூசம்: இந்த வாரம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம் புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.

ஆயில்யம்: இந்த வாரம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.

பரிகாரம்: தினமும் அருகில் இருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வேப்பிலை அர்ப்பணித்து வழிபட்டு வர பொருளாதார தேக்க நிலை மாறும்.

சிம்மம்:
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் குரு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும்.

குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த வாக்கு வாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம்.

பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத் துறையினருக்கு காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள்.மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் சக வியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.

பூரம்: இந்த வாரம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலை வலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சு வார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசிகிட்டும்.

பரிகாரம்: தினமும் சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்வதன் மூலம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி:
(உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சனி - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பண வரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். உறவினர், நண்பர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு மற்றவர்கள் ஆலோசனைகளை ஏற்கும் முன் அது பற்றி பரிசீலிப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு உயர் நிலையில் உள்ளவர்களுடன் மன வருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகளுக்கு விரும்பத்தகாத வாக்கு வாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருப்பின் அதை தள்ளி வையுங்கள்.

அஸ்தம்: இந்த வாரம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு உடல் நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு அருந்த முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக் குழப்பங்கள் ஏற்படக் கூடும்.

பரிகாரம்: தினமும் அருகில் இருக்கும் பெருமாளுக்கு துளசி கொடுத்து வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். பொருளாதார சிக்கல்கள் அகலும்.

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT