விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர் நீச்சல் போட்டு பழகியவர்கள். தர்மம், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்.
உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு பிறப்ப தால் பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிந்து சீர் செய்வீர்கள். தடைகள் உடைபடும். புதுப் பொலிவுடன் காணப்படு வீர்கள். கிடப்பில் கிடந்த பல வேலைகளை முழுமூச்சுடன் முடிப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். தள்ளிப்போன சுபகாரியங்கள் கைகூடி வரும்.
சொந்த ஊர் கோயில்களில் முதல் மரியாதை கிடைக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கனவுகளை பூர்த்தி செய்வீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு வாரிசு உருவாகும். தம்பி, தங்கையின் கல்யாணம் தடையின்றி முடியும். அரைகுறையாக நின்று போன வீட்டை முழுமையாக கட்டி முடிக்க வங்கியில் கடன் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் அனுபவமிகுந்த வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது.
1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 6-ம் வீட்டில் நிற்பதால் காரியத் தடைகள், அலைச்சல் வரக்கூடும். குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். 1.6.2026 முதல் 14.10.2026 வரை குருபகவான் ராசிக்கு 7-ம் வீட்டுக்கு செல்வதால் திடீர் பண வரவு உண்டு. 14.10.2026 முதல் 31.12.2026 வரை குருபகவான் ராசிக்கு 8-ம் வீட்டுக்கு செல்வதால் வாகனத்தில் கவனம் தேவை.
14.5.2026 முதல் 8.6.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால், நகைகளை கவனமாக கையாளுங்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 12.11.2026 முதல் 31.12.2026 வரை 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால், அந்தரங்க விஷயங்களை வெளியே சொல்ல வேண்டாம்.
இந்த வருடம் முழுவதும் சனிபகவான் ராசிக்கு 3-ம் இடத்தில் நிற்பதால் தைரியமான முடிவெடுப்பீர்கள். புதிய பதவிகள் தேடி வரும். டிச.4-ம் தேதி வரை ராகு 2-ம் வீட்டில் நிற்பதால் வீண் விவாதங் கள் வரக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ராகு 8-ம் வீட்டுக்கு வருவதால் வாகனத்தில் சிறு சிறு விபத்துகள் நிகழும். டிச.5-ம் தேதி முதல் ஜென்ம ராகுவாக வருவதால் எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரும். கேது 7-ம் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்கள் வரும்.
இல்லத்தரசிகளுக்கு கணவர்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு. குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் மாறும். கன்னிப் பெண்களுக்கு கல்லூரிப் படிப்பில் வெற்றியுண்டு. மாணவ-மாணவி களுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும்.
புதிய கலைகள் கற்றுக் கொள்ள முயற்சிப்பீர். தொழில் துறையில் முன்னேறும் வாய்ப்புகளைப் பெறுவீர். உணவு, துணி தொடர்பான தொழில்கள் தொடங்கலாம். அக்கம் பக்கத்தினர், உறவினரின் அவச்சொல்லுக்கு செவி சாய்க்க வேண்டாம். சிலருக்கு அரசுப் பணி கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.
வியாபாரிகளுக்கு பற்று வரவு உயரும். போட்டிகளை தவிடுபொடி ஆக்குவீர்கள். வராது என்றிருந்த பாக்கி தானாக வந்து சேரும். பழைய கடையை மாற்றியமைப்பீர். வேலையாட்களை அரவணைத்துப் போவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுதொழிலில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். பங்குதாரர்களும் உங்களை புரிந்து கொள்வார்கள். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை சந்திக்க நேரும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். ஒருபுறம் பணிச்சுமை அதிகரித்தாலும், உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களால் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பணவரவு பதிவேடுகளை கவனமாக கையாளுங்கள். திடீர் இடமாற்றம் உண்டு. அது சாதகமாகவே அமையும். கணினி துறையினருக்கு புது சலுகைகளும், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
கலைத்துறையினருக்கு தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். வீண் விமர்சனம், வதந்தியிலிருந்து விடுபடுவீர்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெற வைப்பதாக அமையும்.
பரிகாரம் : திருநெல்வேலியில் இருந்து மேற்காக 4 கிமீ சென்றால் பாவூர்சத்திரம் வரும். அங்கிருந்து 2 கிமீ அருகே சுரண்டை செல்லும் வழியில் கீழப்பாவூரில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை ஏகாதசி திதியில் அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் பசு நெய்யில் சிவப்பு திரியிட்டு விளக்கேற்றி வணங்குங்கள். தன்னம்பிக்கை துளிர்விடும்.