சிறப்பு பலன்கள்

கடகம் ராசியினருக்கான 2026 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள்

முனைவர் கே.பி.வித்யாதரன்

அடிமனதில் ஒன்றை குறி வைத்துவிட்டால் அதை அடையும் வரை ஓயாத நீங்கள், ஒருபோதும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள்.

உங்கள் ராசிக்கு லாபஸ்தானமான 11-ம் வீட்டில் உங்கள் ராசிநாதன் சந்திரன் உச்சம் பெற்றிருக்கும் நேரத்தில் இந்த 2026-ம் ஆண்டு பிறப்பதால் உங்களின் நீண்டநாள் விருப்பங்கள் அனைத்தும் நிறை வேறும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகள் முழுமையடையும். கடன் தொல்லைகளிருந்து முழுமையாக விடுபடுவீர்கள். விலை யுயர்ந்த தங்க அணிகலன்களை வாங்குவீர்கள். சொத்துப் பிரச்சினைகளை சுமுகமாக பேசித்தீர்ப்பீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த கம்பெனி யில் வேலை கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு.

1.1.2026 முதல் 31.5.2026 வரை குருபகவான் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் விரயச் செலவு கள் வரக்கூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். யாரையும் குறை கூற வேண்டாம். 1.6.2026 முதல் 14.10.2026 வரை ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக இருக்கிறார்.

சகோதர வகையில் அனுசரித்துப் போகவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 14.10.2026 முதல் 31.12.2026 வரை குரு பகவான் ராசிக்கு 2-ம் வீட்டுக்கு செல்வதால் குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். ஓரளவு பணப்புழக்கம் உண்டு.

1.1.2026 முதல் 12.1.2026 வரை 6-ம் வீட்டில் சுக்கிரன் மறைவதால் அடிக்கடி தூக்கமின்மை ஏற்படும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள்.

23.2.2026 முதல் 2.4.2026 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் செவ்வாய் மறைவதால் மன அழுத்தம், டென்ஷன், உடல் சோர்வு வந்து போகும். ராசிக்கு 9-ல் சனி இருப்பதால் தந்தையாருக்கு உடல்நலம் பாதிக்கும். மனைவி வழியில் சொத்து வரும்.

டிச.4-ம் தேதி வரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் கேது நிற்பதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். கண் வலி வந்து விலகும். 8-ம் வீட்டில் ராகு நிற்பதால் அடிமனதில் ஒரு பயம் இருக்கும். விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பழைய வாகனம் வாங்காதீர்கள்.

டிச.5-ம் தேதி கேது ராசிக்குள் வருவதால் லேசாக தலைச்சுற்றல் மற்றும் தலைவலி வந்து விலகும். பணிச்சுமை அதிகரிக்கும். ராகு 7-ம் வீட்டில் அமர்வதால் தம்பதிக்குள் கருத்துவேறுபாடு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களை அனுசரித்துப் போகவும். அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.

இல்லத்தரசிகளுக்கு உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். கன்னிப் பெண்களுக்கு தடைபட்ட கல்யாணம் முடியும். பெற்றோரின் நிலையறிந்து செயல்படுங்கள். மாணவர்கள் கவனமாக படித்து வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் அதை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள்.

வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் அதிரடி லாபம் உண்டு. வேலையாட்களை முழுமையாக நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். கூட்டுத் தொழில் பங்குதாரர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உங்களின் கடின உழைப்பை மேலதிகாரி புரிந்து கொள்வார். கணினி துறையினருக்கு புதிய சலுகைகள் தேடி வரும். பார்வை கோளாறு, தசைப்பிடிப்பு நீங்கும். கலைத் துறையினருக்கு மூத்த

கலைஞர்களின் ஆதரவு கிட்டும். பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். அரசால் பரிசு, பாராட்டு உண்டு.

மொத்தத்தில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, சவால்களில் வெற்றி பெறு வதுடன் வருமானத்தையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்: அரியலூர், ஜெயங்கொண்டத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள உடையார்பாளையம் நகரின் மையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பயற்ணீ சுவரரை வில்வம் சாற்றி வணங்குங்கள். எதிலும் சுபிட்சம் உண்டாகும்.

SCROLL FOR NEXT