மாத பலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம்: மே மாத பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- ராசியில் சூரியன், புதன் - தனவாக்கு ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சனி என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: பொருளாதாரத்தில் கெட்டிக்காரர்களான மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் உங்கள் பிடிவாதத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர் நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். கடன் கொடுப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும். வாக்கு கொடுப்பதற்கு முன் யோசனை செய்து கொடுக்கவும். காப்பாற்ற முடியாமல் போகலாம்.

தைரியம் சிறக்கும். அதற்காக அசட்டு தைரியம் எதிலும் கூடாது. இளைய சகோதரத்திடமிருந்து அனுகூலம் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் யோகம் உண்டு. பயன்படுத்தி கொள்ளவும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். தொழிலில் லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. எச்சரிக்கையுடன் நேரத்தை வீணாக்காமல் படிக்கவும். வெற்றி நிச்சயம். குறுக்கு வழிகளை நாடக்கூடாது. பெண்களுக்கு உடல் நிலையில் கவனம் தேவை. மருத்துவத்திற்கு என சேமிக்க பழகுங்கள். திடீர் செலவுகள் வந்து கடுப்பேற்றலாம். கவனம். வாழ்க்கைத் துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள்.

அஸ்வினி: இந்த மாதம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

பரணி: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பண வரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையும்.

பரிகாரம்: தினம்தோறூம் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வலம் வருவது நல்லது | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: மே 03, 04, 05, 31 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 19, 20 |

ரிஷபம்:
(கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: கொடுத்த வாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாதம் முயற்சி செய்த அளவுக்கு வெற்றி, ஆனால் நினைத்த இடத்திற்கு வரத்தடைகள் என அனைத்தும் இனி மாறும். முயற்சிகளை இரு மடங்காக்குங்கள், வெற்றிகள் உங்களைத் தேடி வரும் காலம் இது. உங்கள் பொன்னான நேரத்தை அடுத்தவருக்காக வீணாக்காதீர்கள். அடுத்தவரை பற்றி பேசாவிட்டாலும் நீங்கள் கூறியதாக சிலர் பற்ற வைக்க கூடும். கவனம் தேவை. குடும்பத்தில் வாழ்க்கை துணையுடன் உறவு சிறக்கும். உடல் நிலையில் மிகுந்த கவனம் தேவை. வாகனங்களை கையாளும்போது எச்சரிக்கை தேவை.

புதிய நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. தந்தையுடன் உறவு சிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு பொன்னான காலம் இது. தொழில் செய்பவர்கள் உங்கள் வியாபாராத்தை பெருக்கும் காலம் இது. மிகவும் லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள். தூங்கப் போகும் முன் எந்த விதமான யோசனைகளும் வேண்டாம். ஏதேனும் பயணம் செய்ய நேர்ந்தால் சரியாக திட்டமிடவும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும்.

வாய்ப்புகள் இருந்தாலும் உடல் நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. மாணவர்கள் கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிறிது முயற்சி தேவை. பெண்களுக்கு வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் அமையும். தாயார், தாய் வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து அதை செய்ய மறவாதீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும்.

ரோகிணி: இந்த மாதம் வாக்கு வன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சனைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும்.

பரிகாரம்: அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 06, 07 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 21, 22, 23 |

மிதுனம்:
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சனி - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இனிய சொற்கள் பேசும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்திருந்த தன லாபம், தேக ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே நடக்கும். எந்த இடத்திற்கு சென்றாலும் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால் இனி செல்ல முடியும். குடும்பத்தில் இளைய சகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும். சந்தாண பாக்கியம் கிட்டும். தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல விஷயங்கள் நடக்கும்.

முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம். கோபம் கூடவே கூடாது. உத்தியோகஸ்தர்களுக்கு பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். தொழில் செய்பவர்கள் லாப கரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே. கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வர வேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் இருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். நீதிமன்ற வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை வந்து அடையும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் கணவன், மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

திருவாதிரை: இந்த மாதம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிற்று கோளாறு உண்டாகலாம். பண வரத்து கூடும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வலம் வரவும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 08, 09, 10 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 24, 25 |

இந்த மாதம் கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT