பலன்கள்: எதையும் திட்டமிட்டு செய்யும் மகர ராசி அன்பர்களே, இந்த மாதம் நீங்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், பொறுப்பாகவும் செயல்பட வேண்டும். தங்கள் உடல் நிலை சிறப்பான முன்னேற்றம் அடையும். இருந்தாலும் அவ்வப்போது சிற் சில அசௌகரியங்கள் வந்து போகலாம். தூக்கத்திற்கு ஆசைப்படாமல் உழைத்தீர்கள் என்றால் வெற்றி நிச்சயம். உங்கள் வாக்கு வன்மை கூடும். உங்கள் பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தினில் மேல் அதிகாரிளுடன் வாக்கு வாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம்.
புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள். தொழில் செய்பவர்கள் லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரம் இது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் பேச்சைக்க் கேட்டு நடப்பர். எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். தைரியத்தை இழக்காதீர்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும். வீடு, வாகனம், ஆபரணங்கள் வாங்கும் போது கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவினர்களுடன் தேவைப்படும்போது மட்டும் பேசுங்கள். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும்.
வாய்ப்புகள் இருந்தாலும் உடல் நலம் ஒத்துழைக்காமல் போகலாம். சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டம் இது. பெண்களுக்கு குழந்தைகள் நலன் சிறக்கும். பிள்ளைகள் நன்றாக படிப்பர். அவ்வப்போது நோய்கள் வந்து மருத்துவம் பார்த்து சரியாகும். கணவன் - மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. மாணவ மணிகள் மிகுந்த எச்சரிகையுடன் படிக்க வேண்டும். படிப்பில் மந்த நிலை ஏற்படலாம். தங்களது முழு திறனையும் பயன்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் பண வரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
திருவோணம்: இந்த மாதம் வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தில் வாக்கு வாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும்.
பரிகாரம்: வில்வ இலையைப் பறித்து சிவனுக்கு அர்ச்சனைக்குக் கொடுக்கவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 24, 25 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 13, 14 |
பலன்கள்: நம்பியவர்களை கைவிடாத கும்ப ராசி அன்பர்களே, இந்த மாதம் எந்த காரியத்தையும் துணிந்து செய்வீர்கள். இளைய சகோதரத்தின் உடல் நிலையில் கவனம் தேவை. தாயார், தாய் வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். உங்கள் பேச்சு எடுபடும். முக்கியஸ்தர்களின் பழக்கம் ஏற்படும். பணியிட மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு வேலையே மாறலாம்.
தொழில் செய்பவர்கள் முதலீடுகள் செய்யும்போது மனைவியின் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். தூங்கப் போகும் போது தேவையற்ற வீண் குழப்பங்களை களையுங்கள். குடும்பத்தில் பிள்ளைகளின் படிப்பு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் பிள்ளைகள் படிப்பில் சாதனைகள் புரிய வேண்டிய காலம் இது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். உடல் நிலையில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள்.
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். பெண்களுக்கு கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. மாணவர்கள் நண்பர்களிடத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய நேரமிது.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் குடும்பத்தார் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கும்.
சதயம்: இந்த மாதம் பிள்ளைகளிடம் கவனமாக எதையும் எடுத்து சொல்வது நல்லது. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனை தீரும். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் பண வரத்து திருப்தி தரும். மனக் குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். வியாபாரத்தில் புது யுக்தியை கையாளுவீர்கள்.
பரிகாரம்: புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு கோவிலுக்குச் சந்தணம், குங்குமம் கொடுத்து வழிபடவும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 26, 27 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 15, 16 |
பலன்கள்: காரியத்தில் கண்ணாக இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியின் விளிம்பில் சென்று முழு வெற்றியடையாமல் இருந்து வந்த நிலை மாறும். உடல் நிலை சீரான நிலையில் இருக்கும். சிலருக்கு கண் கோளாறுகள் இருந்தால் அது நீங்கும். பேச்சை பாதியாக குறைப்பது நல்லது. நீங்கள் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி வம்பிழுக்கும் மனிதர்கள் உங்களை சூழ்ந்து இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வாகனம், இயந்திரங்கள் பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தினில் நல்ல மதிப்பு கிடைக்கும். உங்களுக்கு பணி இட மாறுதல், பணி உயர்வு கிடைக்கும்.
பணம், நகை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தொழில் செய்பவர்கள் யாருக்கும் கடன் கொடுக்கும் முன் எச்சரிக்கை தேவை. நன்கு விசாரித்து எதையும் செய்யவும். எங்கும் பயணம் செய்யும் முன் மிகுந்த முன்னேற்பாடுடன் செல்லவும். குடும்பத்தில் பேசுவதற்கு முன் நன்கு யோசித்து பேசுங்கள். பண விஷயங்களில் மிகவும் கறாராக இருக்கவும். தேவையற்ற வீண் ஆடம்பர செலவுகளை குறையுங்கள். தைரியம் பிரகாசிக்கும் காலம் இது. ஆனாலும் அசட்டுத்தைரியம் வேண்டாமே. தாயார், தாய் வழி உறவினர்களுடன் உறவுகள் மேலோங்கும். வீடு, மனை, வாகனம், ஆபரணங்கள் யோகம் கூடி வரும் காலம் இது.
கலைத் துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன் மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். பெண்களுக்கு பிள்ளைகள் படிப்பில் கவனம் தேவை. பிள்ளைகளுடன் தேவையற்ற வீண் வாதங்களில் ஈடுபடாதீர்கள். உடல் நிலையில் சீரான நிலை இருந்தாலும் கவனம் தேவை. கணவன் மனைவி உறவில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மாணவ மணிகள் படிப்பில் சாதனைகள் புரியலாம், ஆனால் சோம்பல் கூடவே கூடாது. எதிர்காலத்திற்கு தேவையான முதலீடுகளை வீட்டிலுள்ளவர்களிடம் ஆலோசித்து செய்யவும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த மாதம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுப காரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கும். சிக்கன நடவடிக்கை மேற்கொள்வீர்கள்.
உத்திரட்டாதி: இந்த மாதம் உங்கள் தொழிலில் உங்களுக்கு என தனி முத்திரையை பதிப்பீர்கள். சிலருக்கு வாக்கு கொடுக்க வேண்டி நிர்ப்பந்தம் ஏற்படும். மிக அருமையாக உடல் நிலையில் முன்னேற்றம் இருக்கும்.
ரேவதி: இந்த மாதம் பெரியோர்களின் ஆசி உண்டாகும். ஆடை, அணிகலன் புதிதாக வாங்குவீர்கள். சிலரின் பொறாமைக்கு ஆளாவீர்கள். உன்னத நிலைக்கு செல்ல வேண்டி மனம் ஏங்கும்.
பரிகாரம்: சிவனை வியாழக் கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன் | சந்திராஷ்டம தினங்கள்: மே 01, 02, 28, 29, 30 | அதிர்ஷ்ட தினங்கள்: மே 17, 18 |
இந்த மாதம் கிரகங்களின் நிலை
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.