மாத பலன்கள்

மேஷம், ரிஷபம், மிதுனம்: ஜனவரி மாத ராசி பலன்கள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு - என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: எடுத்த முடிவில் பின் வாங்காத அதே வேளையில் கருத்தும் கண்ணுமாக இருக்கும் மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் மற்றவர்களுடன் இருந்த பகை மாறும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள்.

மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தரும சிந்தனை உண்டாகும். பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

பெண்களுக்கு பணத் தேவை பூர்த்தியாகும். நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.

சூரியன் சஞ்சாரத்தால் முன் கோபம் ஏற்பட்டு அதனால் வீண் தகராறு ஏற்படலாம். நிதானமாக செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு வளர்ச்சி பெற மிகவும் கவனமாக இருப்பது நல்லது. செலவை குறைப்பதன் மூலம் பண தட்டுப்பாடு குறையலாம். பேச்சில் கடுமையை காட்டாமல் இருப்பது நன்மை தரும். மேலிடத்தின் மூலம் மனமகிழும் படியான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பு மனதிருப்தியை தரும்.

அஸ்வினி: இந்த மாதம் தங்களது முழுத் திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த காரியங்கள் முடியும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். ஒரே நேரத்தில் பலவிதமான வாய்ப்புகள் வந்து சேரும் போது தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

பரணி: இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும். நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் நீங்கும். பண வரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த மாதம் மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 14, 15 | அதிர்ஷ்ட தினங்கள்: 7, 8 |

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை- ராசியில் சந்திரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு (வ) - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு - என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: நேரத்தை உயிருக்குச் சமமாக மதிக்கும் ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் தனியாக இருக்க விரும்பாதவர்கள். இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பண வரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனவேதனையில் இருந்து தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படும். சிற்றின்ப சுகம் குறையும். பிள்ளைகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். பெண்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும்.

ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் நல்ல பலன்களே வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பண வரத்து திருப்தி தரும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். டென்ஷனை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த மாதம் புதியதாக வீடு, வாகனம் வாங்கலாம். பழைய வீட்டைப் புதுப்பிப் பதற்கும் சிறந்த காலமாகும். பிறருடைய மனம் நோகும்படி வார்த்தைகளை வாங்கிக் குவிப்பீர். உங்களை விட்டுப் பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

ரோகிணி: இந்த மாதம் தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் கிடைக்கும். நம்பிக்கை உகந்தவர்களாக பழகுவார்கள். வரவுக்குத் தகுந்த செலவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வரி செலுத்துவதில் முறைகளைப் பின்பற்றுங்கள். வேலையாட்கள் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். வேலை பார்த்து கொண்டே உப தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். இடமாற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர பாவங்கள் நீங்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 16, 17, 18 | அதிர்ஷ்ட தினங்கள்: 9, 10 |

மிதுனம்: (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை- ராசியில் குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: நிதானமாக எந்த முடிவையும் எடுக்கும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள். இந்த மாதம் பண வரத்து மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரத்தால் வாக்கு வன்மையால் நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். அதேநேரத்தில் அவர்களால் செலவும் வரும். பெண்களுக்கு உங்களது முயற்சிகளுக்கு இருந்த முட்டுகட்டைகள் அகலும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கையில் காசு புரளும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும்.

பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தேடி வரலாம். மற்றவர்களை திருப்தியடையச் செய்யும் வகையில் உங்களது செயல்கள் இருக்கும். டெக்னிக்கல் சார்ந்த துறையினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். அரசியல்துறையினருக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். விருப்பங்கள் கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். ராசியாதிபதி புதன் ராகுவுக்கு திரிகோணம் பெறுவதால் மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் நீங்கும். எதிர்காலம் பற்றிய திட்டம் தோன்றும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பண வரவும் கிடைக்கும். மேல அதிகாரிகளிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பண வரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும்.

திருவாதிரை: இந்த மாதம் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரித்து மிளிரும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த மாதம் சிறப்பான முன்னேற்றம் உண்டு. இசைத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் வந்து சேரும். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கும் வெள்நாட்டிற்கும் செல்ல வேண்டி வரும். உங்களது உடமைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ளவும். பணம் மற்றும் புதிய நண்பர்கள் சேர்க்கை கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீநரசிம்மரை தீபம் ஏற்றி தரிசித்து வர கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் மனோபயம் குறையும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி | சந்திராஷ்டம தினங்கள்: 19, 20 | அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12, 13 |

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

SCROLL FOR NEXT