இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 ஜனவரி 2026

முனைவர் கே.பி.வித்யாதரன்

மேஷம்: மன தைரியம் கூடும். கேட்ட இடத்தில் உதவி கிட்டும். சாதுர்யமாகபேசி முக்கிய காரியங்களை சாதித்துக் காட்டுவீர். இழுபறியாக இருந்த பணம் வரும். விலையுயர்ந்த பொருட்கள் வாங்குவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். லேசாக தலை வலிவந்து போகும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். அலுவலக ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நிதானமாக செயல்படுவது நல்லது.

மிதுனம்: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் கனிவாக பேசி சமாதானத்துக்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கடகம்: சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கி சந்தோஷம் வரும். வியாபாரத்தில் கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்கள் தவிர்ப்பீர்.

சிம்மம்: இங்கிதமாகப் பேசி வேலையை முடிக்கவும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்துவீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கன்னி: மன நிம்மதியுடன் சில வேலைகளை முடிப்பீர். விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபார ரீதியாக பயணம் மேற்கொள்வீர். பாக்கிகளைபோராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

துலாம்: குடும்பத்தில் உங்களின் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். போட்டிகள் குறையும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

விருச்சிகம்: நினைத்த காரியங்கள் நிறைவேறும். புது முயற்சிகளில் வெற்றி காண்பீர். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அலைச்சல் குறையும். வியாபாரரீதியாக பயணங்கள் செல்வீர். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செயல்படுவது நல்லது.

தனுசு: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக்கொள்ளாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: எதிலும் உங்கள் கை ஓங்கும். கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். விவாதங்களை தவிர்ப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

கும்பம்: அனுபவப்பூர்வமாக பேசுவீர். மனக் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். பழைய கடனை பைசல் செய்ய புது வழி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவை பெறுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

மீனம்: எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.

SCROLL FOR NEXT