மேஷம் : குடும்பத்தில் குழப்பங்கள் வந்து போகும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் அவசர முடிவு வேண்டாம். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.
ரிஷபம் : வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம் : தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சி கை கூடி வரும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டு. பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்.
கடகம் : பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எந்த பிரச்சினையையும் பேசி சமாளிப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
சிம்மம் : பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பூர்வீக வீடு விற்பனையாகும். தாயார், பிள்ளைகளின் உடல் நிலை சீராகும். வாகனச் செலவு குறையும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர். வியாபார போட்டிகள் குறையும்.
கன்னி : சந்திராஷ்டமம் தொடர்வதால் இங்கிதமாக பேசி, வேலையை முடிக்கவும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் அமைதி உண்டு. வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகள் தேங்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம் : விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர். பங்குதாரரின் ஆதரவு கிட்டும். கடந்த ஆண்டைவிட லாபம் கூடும்.
விருச்சிகம் : புது எண்ணங்கள் மனதில் தோன்றும்.உடன் பிறந்தவர்கள் உங்களை புரிந்து கொள்வர். நீண்டநாளாக இழுபறியாக இருந்த காரியம் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் தரவும். போட்ட முதல் ரெட்டிப்பாகும்.
தனுசு : பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்திக் கட்டுவீர். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். வியாபாரம் சூடு பிடிக்கும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
மகரம் : உறவினர், நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். குடும்பத்தினருடன் சென்று முக்கிய பிரமுகர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர். பணவரவு மனநிறைவை தரும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்.
கும்பம் : குடும்பத்தில் உள்ளவர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவு உண்டு. செலவுகளும் தொடரும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரரீதியாக சில மாற்றங்களை செய்வீர்கள். புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம் : பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்.