மேஷம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் எடுத்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். முன்கோபம் நீங்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை வந்து சேரும். வெளியூர் பயணம் உண்டு.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் ஓரளவு லாபமுண்டு. உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். யாருக்கும் எந்த உத்தரவாதமும் தர வேண்டாம்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
கடகம்: பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். நண்பர்களில் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்படும்.
சிம்மம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். சிலர் அடிக்கடி செலவு வைத்த வாகனங்களை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத்தொல்லை உண்டு.
கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் காணப்படும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். ஆன்மிகக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
துலாம்: சொந்தபந்தங்களிடையே மதிப்பு மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். கலைப்பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
தனுசு: எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக்கூடும். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் போட்டிகள் உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரியின் கெடுபிடி அதிகரிக்கும்.
மகரம்: புதியவர்கள் அறிமுகவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: எதிர்பார்த்த காரியங்கள் மளமளவென்று நிறைவேறும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு ஒருபடி உயரும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
மீனம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஆதரவு உண்டு. பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா பயணத்துக்கு செல்ல திட்டமிடுவீர்கள்.